படித்து நான் ரசித்தவை
குமுதம் இதழ்களிலிருந்து :
நீ :
நான் பார்க்கும்
இடங்களில்லாம்
நீ இருக்கின்றாய்,
நான் கேட்கும்
ஒலிகளிலெல்லாம்
நீ சிரிக்கின்றாய்.
என் இரவில் நிலவாகவும்
என் கவிதை கனவாகவும்
இருக்கின்றாய்.
சமயங்களில்
நானாகவும்
இருக்கின்றாய்.
இப்படி
எல்லாமுமாக நீ
இருப்பதால்தான்
நான்
நானாகவே
இருப்பதில்லை
எப்போதும்.
- கவிதா இராமகிருஷ்ணன்
சமாதானம் :
உன்னுடைய வட்டமும்,
என்னுடைய வட்டமும்
ஒன்றாகக் கலந்து விட்டாலும்
நாமிருவரும்
இன்னும்
தனித்தனிதான்
அறிமுகங்களில்
என்ன
நிகழ்ந்து விடப் போகிறது?
சமாதானப் படுத்திக்
கொள்வோம்.
- சங்கரி
காதலாய் :
உன்
மௌனம்
எனக்குத் தெளிவாய்ப்
புரிகிறது...
உன் பேச்சு
என்னை மிகவும்
குழப்புகிறது...
பேசாமல் இரு.
நாம் பேச வேண்டியதை
நம் மௌனங்கள்
பேசிக் கொள்ளட்டும்...
மெள்ள மெள்ள
ஆனால்
மிகத் தெளிவாய்..
- பா.செந்தாமரை
****************************
ஆனந்த விகடனிலிருந்து :
* எனக்கான கேள்வி
உன்னிடத்திலும்
உனக்கான பதில்
என்னிடத்திலும்
இருவரிடமும்
எதுவும் இல்லையென
பாவித்துக் கொண்டிருக்கிறாய்..
- சுகிர்தராணி
* சூரியன் இல்லாத
வானவில்லும்...
நிலவு இல்லாத
பௌர்ணமியும்...
இனிப்பு இல்லாத
சர்க்கரையும்...
மணல் இல்லாத
பாலைவனமும்...
ரசிக்கப்படும்
என்னோடு
நீயிருக்கும் பட்சத்தில் !
- தாஜ்
* பார்ப்பவை எல்லாம்
விழித்திரையில்
பதிகிறது...
கேட்பவை எல்லாம்
செவிப்பறையில்
அதிர்கிறது...
வாசனை எல்லாம்
நாசிக்குள் மடிகிறது...
சுவைகள் அத்தனையும்
நாக்கோடு கரைகிறது...
ஆனால்,
உன் விஷயத்தில் மட்டும்
பார்ப்பதும்
உன் குரல் கேட்பதும்
சுவைப்பதும்
உன் வாசம் நுகர்வதும்
எல்லாமே
இதயம் வரை
பாய்கிறது
எப்படி?
- தாஜ்
* எதிரொலிக்கும்
மலைத் தொடரில்
தனித்து நின்று
உன் பெயரை
உரத்துக் கூவுகிறேன்.
எதிரொலியாய் வருகிறது
என் பெயர் !
எங்கிருக்கிறாய் நீ ?
- ஜெயபாஸ்கரன்
* கை தொட்டுத் தூக்கும் வரை
கதறிக் கொண்டிருக்கும்
தொலைபேசியைப் போன்றது
என் காதல்
கை தொட்டுத் தூக்கியதும்
கதறத் தொடங்கும்
குழந்தையைப் போன்றது
உன் காதல்
- யுக பாரதி
***********************************
பிற நூல்களிருந்து சில கவிதைகள்
* ஒரு வரி
நீ
ஒரு வரி
நான்
திருக்குறள்
நாம்
அன்பே !
அன்பே !
****************************
**************************************
**************************************
*உனக்காக
எத்தனை நாளைக்குத்தான்
எழுதுவது ?
உன்னையே எழுதக் கொடு.
- வஸந்த் செந்தில்
**************************************
* உனக்கான என் பாடலை
எழுதிக் கொண்டு வந்தேன்
மரத்திலிருந்து
ஒரு இலை
நழுவி
நெளிந்து
ஆடி
அசைந்து
அதிர்ந்து
ஊஞ்சலாடி
தாளில் அமர்கிறது
இப்பாடலுக்கான
இசை
இப்படித்தான்...
இருக்கவேண்டும்
என்று சொல்வேன்
- சுதா
**************************************
* பொத்திப் பொத்தி
பூத்த
மௌனப் பூக்களை
சூடிக் கொண்டலைகிறாய்
சத்தமிட்டு சத்தமிட்டு
சருகாகிக் கிடக்கிறேன்.
- முருகன்
**************************************
* இரவா ? பகலா?
சொல்லத் தெரியாதவர்கள்
அந்தி என்று
அழைப்பது போல்
நம்மை
நான்
என்ன சொல்லி
அழைப்பது ?
- சூரிய குமாரன்
**************************************
பதிந்த நாள் : 04.12.2011
அன்பே !
அன்பே !
****************************
* அருகில் இருக்கும்போது
இதழை உறிஞ்சுகிறாய்
தூர இருக்கும்போது
உயிரை உறிஞ்சுகிறாய்
- அறிவுமதி.
இதழை உறிஞ்சுகிறாய்
தூர இருக்கும்போது
உயிரை உறிஞ்சுகிறாய்
- அறிவுமதி.
**************************************
* இந்த நிமிடம்
நீ என்ன செய்து கொண்டிருப்பாய்
என்று சிந்திப்பதிலேயே
போய் விடுகின்றன
எல்லா நிமிடங்களும்
- லெனின் ப்ரசன்னா.
நீ என்ன செய்து கொண்டிருப்பாய்
என்று சிந்திப்பதிலேயே
போய் விடுகின்றன
எல்லா நிமிடங்களும்
- லெனின் ப்ரசன்னா.
**************************************
*உனக்காக
எத்தனை நாளைக்குத்தான்
எழுதுவது ?
உன்னையே எழுதக் கொடு.
- வஸந்த் செந்தில்
**************************************
* உனக்கான என் பாடலை
எழுதிக் கொண்டு வந்தேன்
மரத்திலிருந்து
ஒரு இலை
நழுவி
நெளிந்து
ஆடி
அசைந்து
அதிர்ந்து
ஊஞ்சலாடி
தாளில் அமர்கிறது
இப்பாடலுக்கான
இசை
இப்படித்தான்...
இருக்கவேண்டும்
என்று சொல்வேன்
- சுதா
**************************************
* பொத்திப் பொத்தி
பூத்த
மௌனப் பூக்களை
சூடிக் கொண்டலைகிறாய்
சத்தமிட்டு சத்தமிட்டு
சருகாகிக் கிடக்கிறேன்.
- முருகன்
**************************************
* இரவா ? பகலா?
சொல்லத் தெரியாதவர்கள்
அந்தி என்று
அழைப்பது போல்
நம்மை
நான்
என்ன சொல்லி
அழைப்பது ?
- சூரிய குமாரன்
**************************************
* எரிப்பாய் அணைப்பாய் உன் இஷ்டம்
எதுவும் கேட்காது என் உள்ளம்
தீயோ நீரோ பிரவாகம்
நீ கொடுத்தால் அது பிரசாதம்.
- ரமேஷ் வைத்யா
எதுவும் கேட்காது என் உள்ளம்
தீயோ நீரோ பிரவாகம்
நீ கொடுத்தால் அது பிரசாதம்.
- ரமேஷ் வைத்யா
பதிந்த நாள் : 04.12.2011