இந்த வலைப்பதிவில் தேடு

Love poems லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Love poems லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 ஜனவரி, 2021

"கடலோரக் கவிதைகள்" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்

கடலோரக் கவிதைகள் 
திரைப்படப் பாடல் ஒலிநாடாவில்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளை      பாரதிராஜா தன் குரலில் வாசித்த கவிதைகள்


உன்னைப் பார்த்த பிறகுதான்
நான்
என் தோட்டத்தில்
பூச்செடிகள்
வைக்க ஆரம்பித்தேன்

என் வாழ்க்கைக்குள்
தென்றலாய்
நீ வந்த பிறகுதான்
நான்
திறக்க மறந்த
ஜன்னல்களையெல்லாம்
திறந்து வைத்தேன்

இது என்ன நியாயம்?
எனக்கு 
சுவாசிக்கக் கற்றுக்
கொடுத்து விட்டு
காற்றே !
உன் திசையை
இப்போது
ஏன் திருப்பிக் கொண்டாய் ?

இருண்டு கிடந்த
என் மனதில்
விளக்கேற்றினாய் !
இப்போது
என் கண்களையே
களவாடிக் கொண்டாயே !
என் கண்கள் தான்
நீ ஏற்றிய
விளக்குக்கு விலையா?

ஏன் பைங்கிளியே !
நீ
எவ்வளவுதான்
பறந்தாலும்
வானத்தின் விளிம்பிற்கு
வெளியே போக முடியாது
கிளியே !


காதல் -
ஒரு ரகசிய மழை
பாலைவனங்களையெல்லாம்
பிருந்தாவனங்களாக்கி விடுகிறது.

காதல் நதி
மனமெங்கும்
கலகலவென்று பரவும் போது
அது 
கரும்பாறைகளைக் கூட
கரைத்து விடுகிறது
இதுதான் காதலா?

மனதுக்குள்
இப்படி ஒரு
மாயப் பிரவேசம் இருக்கிறதா?

ஏ காதலே !
ஒரே நாளில்
உடம்பெல்லாம்
லட்சம் சிறகுகளை முளைக்க
       வைத்து விட்டாயே !

நீ போட்ட மந்திரத்தில்
எந்திரத்திலெல்லாம்
பூ பூக்க ஆரம்பித்து விட்டதே !


நிறைவேறிய காதல்
வார்த்தையாகிறது !
நிறைவேறாத காதல்
கவிதையாகிறது !

காதல் -
வார்த்தைகளை விட
மெளனத்தையும்
கண்ணீரையும்தான்
அதிகமாக நேசிக்கிறது !

காதல் -
தன்னைப் பேசுவதில்லை
அதனால்தான்
அது பேசப்படுகிறது.
அதோ !
அவனது தோட்டத்தில்
மழை பொழிய வந்த மேகம்
இடியை மட்டும்
இறக்கி விட்டுப் போய்க்
கொண்டிருக்கிறது


எல்லா மொழியிலும்
அதிகமாக எழுதப்பட்ட
வார்த்தை
காதல் தான் !
ஆனால்
எல்லா தேசங்களிலும்
தடை செய்யப்பட்ட
சொல்லும்
காதல் தான் !
சொல்லப்படாத கவிதை
மொழியின் நஷ்டம் !
சொல்லப்படாத காதல்
சொர்க்கத்துக்கே நஷ்டம் !
ஏ பேதைப் பெண்ணே' !
நீயாவது சொல்லி விடேன்

காதலையும்
கர்ப்பத்தையும்
மாராப்புப் போட்டு
ஏன்
மறைக்கப் பார்க்கிறாய் ?


"வேதம் புதிது" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்

பாரதிராஜாவின் "வேதம் புதிது" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்


அன்பே !
அந்த நதிக்கறையில்
உன் கைக்குட்டை ஒன்றைக்
கண்டெடுத்தேன் !
அது கைக்குட்டையா?
இல்லை
காதல் தேவதை
தன் ஒரு சிறகை
உதிர்த்து விட்டுப்
போய் விட்டதா?

இது கைக்குட்டைதானா?
இல்லை
கல்யாணப் புடவைக்கு
அச்சாரமா?

நீ
வித்தியாசமானவன்
காதல் கடிதத்தை
நெசவு செய்து அனுப்பியவன்
நீ மட்டும்தான்

இப்படித்தான்
பேச நினைக்கிறேன்
ஏதேதோ அர்த்தத்தில்
ஆனால் என் வார்த்தைகளோ
மௌனத்தின் கர்ப்பத்தில்


கண்ணே !

நான் வேதம் ஓத
ஆசைப்பட்டதே
கடவுளைக் காண அல்ல
கண்மணி !
என் காதலியே !
உன்னைக் காண.

நானோ
ஒரு அரசன் தானம்
கேட்பது போல் யாசிக்கிறேன்
நீயோ
நீச்சல் தெரியாத ஒருத்தி
குளத்தில் குதிப்பது போல்
யோசிக்கிறாய்

அது எப்படி?
உன் குடத்தில் இருந்து தண்ணீரும்
வாயிலிருந்து வார்த்தைகளும்
சிந்துவதேயில்லையே !

ஒரு வார்த்தை சொல்லி விடு !
உன் சொல்லுக்குப் பிறகுதான்
இந்தப் பிரபஞ்சம்
அசைவதா? இல்லையா?
என்று ஆலோசிக்கும்.


ஊர் ஒடுங்கி விட்டது !
பிறை நிலவு 
தன் மெளனத்தை மறைக்க
முகிலை இழுத்து 
முக்காடு போட்டுக் கொள்கிறது!

நட்சத்திரங்களை 
காவலுக்கு வைத்து விட்டு 
இரவு கூட உறங்கி விட்டது
நீ மட்டும் உறங்கவில்லை.!


நீ இமைக்கும் சப்தம் தான்
எனக்குக் கேட்கிறதே!
என் இதயத் துடிப்பு
உனக்குக் கேட்கிறதா?


வெளியே வா கிளியே !
என் இமைகளும், விழிகளும்
ஒரு உடன்படிக்கைக்கு வராமல்
அடம் பிடிக்கின்றன !

இன்று நீயும், நானும்
சந்திக்கா விட்டால்
இந்த இரவு
ஒரு பகலைச் சந்திக்காமலேயே
போய் விடும் !

உன்னை எண்ணி உள்ளம் வாடும் 
கண்கள் இரண்டும் சண்டை போடும்

முன் வைத்த காலை
பின் வைப்பதென்ன
நடுக்கம் பிறக்கின்றதா?

இலைகள் அசையும்
ஒலியில் கூட
இதயம் துடிக்கின்றதா?

அச்சத்தில் பாதி
ஆசையில் பாதி
பெண்மை நடக்கின்றதா?

உள்ளம் எங்கும்
வெள்ளம் ஓடும்
மெளனம் கூட
சப்தம் போடும்
ஜீவன் தவிக்கின்றதா?
தேகம் கொதிக்கின்றதா?

கண்மணி
கண்மணி
உன் முகம் கண்டிடக்
கண்கள் துடிக்கிறது
முல்லை இளங்கொடி போகையில்
என்னுயிர் முள்ளில் நடக்கிறது.
சின்னமணிக் குடம்
சிந்தி வழிந்தது
என்னை அழைக்கிறது
கன்னி
உன் நெஞ்சினில் இல்லை
குடத்தினில் ஈரம் இருக்கிறது

இலையுதிர் காலம் என்பது
இறப்பல்ல
இன்னொரு பொழிப்புக்கான
தொடக்கம்
அஸ்தமனம் என்பது
மரணமல்ல
இன்னொரு உதயத்துக்கான
பதுக்கம்
கோடையில் காய்ந்த நதி
கார்காலத்தில் கரை புரள்கிறது

15 ஜனவரி, 2021

மண்வாசனை படத்தில் வைரமுத்துவின் காதல் கவிதைகள்

பாரதிராஜாவின் "மண்வாசனை " படத்தில் வைரமுத்துவின் காதல் கவிதைகள்


அவள் யார்?

யாரவள்?

இந்தக் கிராமத்து நுழைவாயில்
என்னை வரவேற்க வந்த வானவில்லா?
 
விடிந்தும் விடியாத இரவை
இன்றுதான் பார்த்தேன்
நான்
அவளின் கண்களைச் சொல்கிறேன்!
 
கிளி வந்து இன்னும்
கொத்திச் செல்லாத அத்திப் பழங்கள்
நான்
அவளின் இதழ்களைச் சொல்கிறேன்!
 
பளிங்குத் தரையில்
அள்ளி இறைத்த
வெள்ளிக் காசுகள்
நான்
அவளின் சிரிப்பைச் சொல்கிறேன்!
 
போகப் போக
என் டைரியின்
எழுதப்படாத பக்கங்களிலெல்லாம்
இதை விட

இன்னும் சொல்கிறேன்!


30 டிசம்பர், 2020

நான் ரசித்த ட்வீட்டர் காதல் கவிதைகள்

நான் ரசித்த ட்வீட்டர் காதல் கவிதைகள் 

அழகென்று
சிறப்பாய் 
எதுவுமில்லை
பிடித்தவர்களின்
கண்களுக்கு முன்னே..
யாவும் அழகே.
- நீர்ப்பறவை@pithamagal


29 டிசம்பர், 2020

வாரப் பத்திரிக்கைகளில் வந்த காதல் கவிதைகள் (1989)

வாரப் பத்திரிக்கைகளில் வந்த  காதல் கவிதைகள் (1989)

யாசிப்பு:

அவள் வீட்டுச்
சன்னல் வழியே
பிச்சைப் பாத்திரம்
என் விழிகள் !

-      வசந்த குமாரன்

 

காதல் விடுதலை:

உன் அட்ரஸை
நான்
தெரிந்து கொண்டேன்
என் அட்ரஸை
நான்
தொலைத்து விட்டேன்

-      இதய ராஜா

 

முத்தம்:

புன்னகைப்பதற்கு
நூறு முறை
இதழ்களை விரிக்கும் நீ
முத்தமிடுவதற்காக
ஒரு முறை
குவிக்கக் கூடாதா?

-      இரா. சுந்தர மூர்த்தி

 

அன்பே..
உன்னைப் பிரிந்த நாள் முதல்
என் கைகள் முகம்
கழுவுவதில்லை
என் கண்கள்தான்
முகம் கழுவுகிறது…!

-      கலா பிரபாகர்

  


மும்தாஜ்
ஷாஜஹான்
தாஜ்மகால்…
நீ
நான்
இந்தக் கவிதை—

-      வெற்றி பேரொளி

 

கொஞ்சம் :

என்னிடம் கொஞ்சம்
கவிதைகள் உள்ளன

தோட்டத்து கலகலப்பில்
பறித்தது கொஞ்சம்

கடற்கரை ஈரத்தில்
காலடித்தடத்தில்
புரண்டது கொஞ்சம்
 
அவளின் பாதக்கொலுசுகளில்
சிந்தியது கொஞ்சம்
 
என்னிடம் கொஞ்சம்
கவிதைகள் உள்ளன
சொல்லப்படாமலேயே

-      பொன் சந்தானக்கிருஷணன்




                                   பூ:

நீயல்லவா – பூ
நானெப்படி
வாடினேன்

-      ஏ.ஆரோக்கியராஜ்

 


ஞாபகம் :

காலை தைத்த
இடத்தில் தேய்த்த
போது எறும்பு செத்தது
ஆனாலும் வலி இருந்தது
என் முதல் காதலைப் போல

-      இளங்கோராஜ்


உன்
பாதம் பதிந்த
மண்ணில்
நீர் பாய்ச்சினேன்
ரோஜாத் தோட்டமே
உருவானது

-      K.ராஜா சந்திரசேகர்

 

பெயர் :

உலகத்திலேயே
மிகப் பெரிய கவிதை
எது என்று
எனக்குத் தெரியாது
மிகச் சிறிய
கவிதை தெரியும் –
அது
உன் பெயர்.

-      K. ராஜா சந்திரசேகர்

 


உனக்கென்ன :

உனக்கென்ன
ஒரு சின்னச் சிணுங்கலை
தீப்பொறி போல
வீசி விட்டுப் போகிறாய்
பற்றிக் கொண்டு எரியும்
பஞ்சுப் பொதி
என் மனசல்லவா…?

-      K.ஜெகதீஷ்

 


ப்ரியமானவளே…
இது ஒரு
தண்ணீர் யாசகம் !
 
நீ
ஏற்றுக் கொண்டால்
நிறைந்து போவேன்

இல்லையென்றாலும்
உன் நினைவுகளில்
நினைந்து நினைந்து
கரைந்து போவேன்…
 
ஆம் –
கற்பூரம் எரிந்தால்தான்
அதன் வாசம் தெரியும்
நான் பிரிந்தால்தான்
என் சோகம் புரியும்
 
பதில்:
இந்த களர் நிலம்
உங்கள்
பார்வை மழைக்காக
காலமெல்லம்
காத்திருக்கும் !
இங்கே
புல் விளைந்தாலும்
புதல்வர்கள் விளைந்தாலும்
அது –
உங்களால் மட்டுமே !

-      பா. ராஜகோபாலன்,
மன்னார்குடி


நீ உட்கார்ந்து விட்டுப் போன
பெஞ்சில்
யாருக்கும் தெரியாமல்
உட்கார்ந்து கொண்டேன்
நான் -
அப்போது
ஷாஜஹானின் மயிலாசனம் கூடத்
துரும்பாகத் தெரிகிறதடி !

- பாக்யா வார இதழிலிருந்து

28 டிசம்பர், 2020

காதல் கவிதைகள் -மீரா, அபி, புகழேந்தி, சிற்பி

காதல் கவிதைகள் 

- மீரா, அபி, புகழேந்தி & 
சிற்பி பாலசுப்பிரமணியம்


நவயுகக் காதல் :

உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்…
 
நீயும் நானும்
ஒரே மதம்
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்புங்கூட…
 
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்…
மைத்துனன்மார்கள்
 
எனவே
செம்புலப்பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

-      மீரா (ஊசிகள்)



நீயும் நானும் :

நீ… நீ… உன்னை
எங்கோ… என்றோ
பார்த்த நினைவு
 
காதல் மாளிகை
நிலா முற்றத்தில்
வசந்தங்களின் ஊர்வலத்தை
வேடிக்கை பார்க்கக்
கூடினோமல்லவா …!
 
நம்மிடம்
சஊகம் அனுப்பிய
வேற்றுமை வெள்ளங்கள்
நம் அன்பின் பனியால்
சமாதியாய் உறைந்த பின்
காலடிச் சத்தத்தால்
வாழ்வின் புதிய தொனிகள்
அறிமுகப்படுத்தினோம்
 
உறக்கக் கோப்பைகளில்
கன்வு மதுவின்
கண்ணாடிக் குமிழிகளில்
நம் முகங்கள்
 
ஒரே நேரத்தில்
பல பிறவிகளை
எடுத்ததை
ரசித்திருக்கிறோம்

-      அபி (மௌனத்தின் நாவுகள்)






ப்ரியமானவளே :


என் எஃகு இதயத்தைக்
‘காந்த’ விழிகளால்
பறித்துக் கொண்டவளே…
நிராயுதபாணியான
என் மீது
உன்
பார்வை அம்புகளால்
நீ
வீசிய பாணம்
என்னை மட்டுமா
தோற்கடித்தது
 
        என் ப்ரிய சகி
தூண்டில் மீனாய்
ஏன்
துன்புறுத்துகிறாய்
 
உன் உடலை விட
எனக்கு
உன்
உடல்தான் இனிக்கிறது…

-புகழேந்தி (அக்கினிக் குஞ்சுகள்)


காதல் நெஞ்சம்:
 
விரிந்த ரோஜா           
ஜன்னல் வழியே
தலை நீட்டும்…
 
குவிந்த இதழில்
மல்லிகை மொட்டுகள்
முறுவலிக்கும்
 
கெண்டை மீன்கள்
இங்குமங்கும்
பாய்ந்து பாய்ந்து
       நீந்தும்,…..
 
பூப்பஞ்சுக் கரங்கள்
புரியாத கோலங்களில்
புணர்ந்து கொள்ளும்
 
கால் விரல்கள்
வெட்கம் சிந்தி
நெஞ்சத்தை சூடேற்றும்…
 
உலகம்
கடுகாய் சிறுத்துக்
காலடியில் கிடக்கும்
 
சுய நலம்
சும்மா இருக்காமல்
சுண்டி சுண்டி இழுக்கும்
 
வெட்கம்
நகக் கண்கள் வழியே
நரம்புகளைத் தாக்கும்…
 
ஓ…
காதல் ஒப்பந்தம்
கையெழுத்தானதாலா...?

-புகழேந்தி (அக்கினிக் குஞ்சுகள்)

20 டிசம்பர், 2020

நான் ரசித்த ட்வீட்டர் காதல் வரிகள் 2

நான் ரசித்த ட்வீட்டர் காதல் வரிகள் 2



அழகான பெண்ணிடம் 
திமிர் இருக்குமோ 
இல்லையோ 
அன்பான பெண்ணிடம் 
நல்ல குணம் 
கட்டாயம் இருக்கும்...!
- NahooranA



இறுக பற்றிக்கொண்டான் 
இதயத்தை..!!
அவன் ஆழமான 
அன்பின் நேசத்தால்..!!

- Abukatheeja



எத்தனை முறை படித்தாலும் 
புரியாத புதிராகவே உள்ளது 
அவள் பார்வையின் 
அர்த்தங்கள்...!!!

பசி தீர்க்கும்
பார்வை கொடு..

தாகம் தீர்க்கும்
இதழமுதம் கொடு..

விருப்பம் தீர்க்கும்
சிறு தீண்டல் கொடு..

இதம் தரும் 
நெஞ்சனை கொடு..

இம்சை களையும்
இன்சொல் கொடு..

இத்தனையும் நீ
இல்லாத போதும்
நினைத்திருக்க
வரம் கொடு...
#கண்மணி 

தேவ ரகசியத்தை போன்ற
அதிசயத்தை நிகழ்த்திக்
காட்டுகின்ற கண்கள்,

திராட்சைப் பழரசத்தில் 
போதை மகத்துவத்தை 
புதைத்து வைத்திருக்கும் இதழ்கள்.. 

எனை நோக்கித் தூவும்
உன் வார்த்தைப் பூக்கள்
நெஞ்சக் குளத்தில்
தேங்கிக் கிடக்கும் 
நினைவை வருடாதோ!

- உவமைகளின் அரசன் நம் டி.ராஜேந்தர்.

அக்கினி பிளம்பும்
வலியில் சுட்டாலென்ன
உன் ஆறுதல் வார்த்தைகள்
தொடர்ந்தால் ஆயுளிற்கும்
நான் தாங்கிடுவேன்

#உனதானவள்
#ராட்ஷுღ

கைகளுக்குள் மூடி வைத்தும் 
விரலிடுக்குகளில் 
விடை பெறத் துடிக்கிறது; 
என் அழகியெனும் 
அவளின் நினைவுகள்

- பாண்டி பிரகாஷ்


கந்தக பூமியில் 
இருக்குமுனக்கு , 
எப்படித்தான் 
மழையை அறிமுகம் 
செய்வது ?
முத்தந்தவிர்த்து ....

#கயல் 
S.Murugesan


தேடிக் கொண்டே
இருக்கிறேன்!
சேலை விலகிய நேரத்தில்
தொட்டு விளையாடி
ஒரே ஒரு முறை உனை
அவஸ்த்தைக் கொள்ளச் செய்த
அச்சிறுமழையை!
- அடங்காதவன்


என் விழியாகி 
வழி நடத்துவாய் 
என கருதி..
கண்சிமிட்டாமல்
காத்திருக்கிறேன்.
-@Im-Navyaa




 

 
தண்ணீர் வரம் பெற்றது
அவள் பொற்கரங்களில்
தவழ்ந்ததால்.