தமிழ்வாணன்,சுஜாதா, பாலகுமாரன், புதுக்கவிதைகள் என்று வயதுக்கேற்ப மாற்றங்களடைந்தது என் வாசிப்பு. ரசித்தவற்றை நோட்டுப் புத்தகங்களிலும், கிழித்து வைத்தும் பத்திரப்படுத்தினேன்.என் சேகரிப்புக்கள் செல்லரிப்பதைத் தடுத்து அவற்றின் ஆயுளை நீட்டிக்கும் வகையில் டிஜிட்டல் உலகிற்குள் பதிவு செய்கிறேன். சிலவற்றை எழுதியவரே கூட மறந்திருக்கலாம். அவர்களின் அனுமதியின்றி பதிவதற்கு மன்னிக்க வேண்டும். அவர்கள் எழுத்துக்களை 25 ஆண்டுகளாக ரசிக்கிறோம் என்பதும் அவர்களுக்குப் பெருமையே.
இந்த வலைப்பதிவில் தேடு
17 ஜனவரி, 2021
"கடலோரக் கவிதைகள்" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்
கடலோரக் கவிதைகள்
"வேதம் புதிது" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்
பாரதிராஜாவின் "வேதம் புதிது" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்
அன்பே !
அந்த நதிக்கறையில்
உன் கைக்குட்டை ஒன்றைக்
கண்டெடுத்தேன் !
அது கைக்குட்டையா?
இல்லை
காதல் தேவதை
தன் ஒரு சிறகை
உதிர்த்து விட்டுப்
போய் விட்டதா?
இது கைக்குட்டைதானா?
இல்லை
கல்யாணப் புடவைக்கு
அச்சாரமா?
நீ
வித்தியாசமானவன்
காதல் கடிதத்தை
நெசவு செய்து அனுப்பியவன்
நீ மட்டும்தான்
இப்படித்தான்
பேச நினைக்கிறேன்
ஏதேதோ அர்த்தத்தில்
ஆனால் என் வார்த்தைகளோ
மௌனத்தின் கர்ப்பத்தில்
கண்ணே !
நான் வேதம் ஓத
ஆசைப்பட்டதே
கடவுளைக் காண அல்ல
கண்மணி !
என் காதலியே !
உன்னைக் காண.
நானோ
ஒரு அரசன் தானம்
கேட்பது போல் யாசிக்கிறேன்
நீயோ
நீச்சல் தெரியாத ஒருத்தி
குளத்தில் குதிப்பது போல்
யோசிக்கிறாய்
அது எப்படி?
உன் குடத்தில் இருந்து தண்ணீரும்
வாயிலிருந்து வார்த்தைகளும்
சிந்துவதேயில்லையே !
ஒரு வார்த்தை சொல்லி விடு !
உன் சொல்லுக்குப் பிறகுதான்
இந்தப் பிரபஞ்சம்
அசைவதா? இல்லையா?
என்று ஆலோசிக்கும்.
பிறை நிலவு
தன் மெளனத்தை மறைக்க
இரவு கூட உறங்கி விட்டது
முன் வைத்த காலை
பின் வைப்பதென்ன
நடுக்கம் பிறக்கின்றதா?
இலைகள் அசையும்
ஒலியில் கூட
இதயம் துடிக்கின்றதா?
அச்சத்தில் பாதி
ஆசையில் பாதி
பெண்மை நடக்கின்றதா?
உள்ளம் எங்கும்
வெள்ளம் ஓடும்
மெளனம் கூட
சப்தம் போடும்
ஜீவன் தவிக்கின்றதா?
தேகம் கொதிக்கின்றதா?
கண்மணி
கண்மணி
உன் முகம் கண்டிடக்
கண்கள் துடிக்கிறது
முல்லை இளங்கொடி போகையில்
என்னுயிர் முள்ளில் நடக்கிறது.
சின்னமணிக் குடம்
சிந்தி வழிந்தது
என்னை அழைக்கிறது
கன்னி
உன் நெஞ்சினில் இல்லை
குடத்தினில் ஈரம் இருக்கிறது
இலையுதிர் காலம் என்பது
இறப்பல்ல
இன்னொரு பொழிப்புக்கான
தொடக்கம்
அஸ்தமனம் என்பது
மரணமல்ல
இன்னொரு உதயத்துக்கான
பதுக்கம்
கோடையில் காய்ந்த நதி
கார்காலத்தில் கரை புரள்கிறது
15 ஜனவரி, 2021
மண்வாசனை படத்தில் வைரமுத்துவின் காதல் கவிதைகள்
அவள் யார்?
யாரவள்?
இந்தக் கிராமத்து நுழைவாயில்
என்னை வரவேற்க வந்த வானவில்லா?
விடிந்தும் விடியாத இரவை
இன்றுதான் பார்த்தேன்
நான்
அவளின் கண்களைச் சொல்கிறேன்!
கிளி வந்து இன்னும்
கொத்திச் செல்லாத அத்திப் பழங்கள்
நான்
அவளின் இதழ்களைச் சொல்கிறேன்!
பளிங்குத் தரையில்
அள்ளி இறைத்த
வெள்ளிக் காசுகள்
நான்
அவளின் சிரிப்பைச் சொல்கிறேன்!
போகப் போக
என் டைரியின்
எழுதப்படாத பக்கங்களிலெல்லாம்
இதை விட
23 நவம்பர், 2011
வைரமுத்து காதல் கவிதை வரிகள் :
உனக்கு என் நன்றி !
உன்
பார்வையின் கிரணங்கள்
விழாமலிருந்தால்
இந்த இலை
ஒளிச் சேர்க்கை செய்யாமலே
உதிர்ந்திருக்கும்
.....................................................
எனக்கு மறந்து போன
ஒரு
வனாந்தரத்தில்
என்னைப்
பெயர் சொல்லி அழைத்தது யார்?
நீயா ?
......................................................
ஒரு
மின்னல் கீற்று
என்றல்லவா நினைத்திருந்தேன்?
நீ எப்படி அதில்
நிரந்தரப் பாய் முடைந்தாய்?
.....................................................
சப்தங்களுக்கே அர்த்தம்
சரியாய் விளங்கவில்லை.
இப்பொழுதோ –
மௌனத்திற்கும் கூட
உரையெழுத முடிகிறது.
அழுத்தி உச்சரித்ததால் அழுதிருக்கிறேன்.
.......................................................
இனி நாம்
தாஜ்மஹாலில்
சந்திக்க வேண்டாம்
ஏனெனில்
இங்கே
ஒரு பணக்கார மன்னன்
ஏழைகளின் காதலை
ஏளனம் செய்திருக்கிற
..........................................................***************















