நான் ரசித்த
ஞானக்கூத்தன் கவிதைகள்
கொள்ளிடத்து முதலைகள்:
ஒன்றிரண்டு நான்கைந்து…பத்து பத்தாய்…ஒரு நூறா? ஆயிரமா?கணக்கில் வாரா… கொள்ளிடத்தில் மணல்வெளியில்
நடுச்சாமத்தில்
கரைமரங்கள் தூக்கத்தில்
ஆடும் போதில்
ஒன்றிரண்டு நான்கைந்து…
பத்து பத்தாய்…
ஒரு நூறா? ஆயிரமா?
கணக்கில் வாரா…
சிறிது பெரிதாய் முதலைக் கூட்டம்சற்றும் அமைதி குலையாமல் அவைபேசிக் கொள்ளும் சில நொடிக்குள் முடிவெடுத்துக்
கலையும் முன்னே
குறுங்காலால் மணலிலவை
எழுதிப் போட்ட
மரும மொழித் தீர்மானம்என்ன கூறும்?
****************************************************
அம்மாவின்
பொய்கள்:
பெண்ணுடன்
சினேகம் கொண்டால்காதறுந்து
போகும் என்றாய்
தவறுகள்
செய்தால் சாமி
கண்ணை
குத்தும் என்றாய்
தின்பதேற்கேதும்
கேட்டால்
வயிற்றுக்குக்
கெடுதல் என்றாய்
ஒரு
முறத் தவிட்டுக்காக
வாங்கினேன்
உன்னை என்றாய்
அத்தனை
பொய்கள் முன்பு
என்னிடம்
சொன்னாய் அம்மா
அத்தனை
பொய்கள் அன்று
சொன்ன
நீ எதனாலின்று
பொய்களை
நிறுத்திக் கொண்டாய்
தவறு
மேல் தவறு செய்யும்
ஆற்றல்
போய் விட்டதென்றா?
எனக்கினி
பொய்கள் தேவை
இல்லையென்றெண்ணினாயா?
அல்லது
வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப்
பொய்கள் சொல்லும்
பொறுப்பினி
அரசாங்கத்தைச்
சார்ந்த்தாய்
கருதினாயா?
தாய்ப்பாலை
நிறுத்தல் போலத்
தாய்ப்
பொய்யை நிறுத்தலாமா?
உன்
பிள்ளை உன்னை விடால்
வேறெங்கு
பெறுவான் பொய்கள்?