இந்த வலைப்பதிவில் தேடு

30 ஜூன், 2016

பாலகுமாரனின் “இரும்பு குதிரைகள்” நூலிலிருந்து நான் ரசித்த சில வரிகள்….



பாலகுமாரனின் 

“இரும்பு குதிரைகள்” நூலிலிருந்து  

நான் ரசித்த சில வரிகள்….

 



“என் அனுபவம் என் கதை. என் கதையை படிச்சு என் அனுபவம் உனக்கும் அனுபவமாறபோது என் வயசும் உன் வயசும் சேர்ந்து 30 வயசுக்கு 60 வயசு பக்குவம் வந்துடும். வரலாம் இல்லயா?. ஏன் எழுதறேன்னு கேட்ட்யே அதுக்கு இதுதான் பதில்”

“நல்லதோ, கெட்டதோ நம் கையில் இல்லை. உயர்வோ, தாழ்வோ நாம் தீர்மானிப்பதில்லை. அல்பம் என்று ஒரு பொருளும் இல்லை. நேற்றைய அல்பம் இன்றைய அற்புதம். இன்றைய அற்புதம், நாளைய அல்பம். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு.”

“தன்னை மட்டமாக்கி பேசுறது தப்பு…… நம்மை நாமே மதிச்சா பிறத்தியாரை அவதூறு பண்ணத்தோணாது. கெட்ட வாசகம் வாயிலிருந்து வராது”

“புருஷன் என்பவன் சகல நேரத்திலும் பெண்களுக்கு போதையானவன்தான். இங்கு பெண் சொத்து என்பது சரியல்ல. புருஷன்தான் சொத்து. பிரிக்க முடியாத சொத்து. பெரும் செல்வம்”

“ ……இந்த தேசத்தில் சுபிட்சம் இல்லை. சகலரும் த்ருடர்கள். வாய்ப்புக் கிடைக்குமானால் அனைவரும் கொள்ளைக்காரர்கள். பிறன்மனை சுகிப்பவர்கள். பிறர் பொருள் கவர்பவர்கள். ‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே, வேரில் பழுத்த பலா’ நெஞ்சில் ஈரத்தோடு பாடிய பாடலுக்கு வேறு அர்த்தம் கற்பிப்பவர்கள்……”

“……பொறுப்பற்ற பொது ஜனம். தனி மனிதனாய் இருக்கிற போது உண்டான பொறுப்பு, பயம் பொது ஜனமாய்க் கூடுகையில் சிதறி விடுகிறது…….

“… கூடல் என்பது பெண்ணோடு மட்டும்தானா, நாலு பேருடன் பேசுவதும், எழ்துவதும், தன் மனசை லட்சம் பேரிடம் வெளியிடுவதும், அதை அவர்கள் அறிந்து கொள்வதும் கூடக் கூடல்தான். நான் தவிர்ப்பது இந்த வெளியிடுதலுக்கா? இந்த அமைதியின்மை, தவிப்பு, அலையல் இது குறித்துத்தானா? ……..“


“…. வாழ்க்கையில் முன்னேற பயம் அவசியம். பயத்திற்கு பாதுகாப்பற்ற தன்மை அவசியம். பாதுகாப்பற்ற தன்மைக்கு சிதிலமான குடும்பம் வேண்டும்…”

“அடிப்படை வசதி உள்ளவன்தான் ரசனையோடு இருக்க முடியும். குழப்பமின்றி யோசிக்க முடியும்”

“அலட்சியம் பண்ணுகிறவர்களைத்தான் லட்சியம் பண்ண முடிகிறது”

“”கேள்வி கேட்டுக்க ஆரம்பிச்சுட்டே. இனி ஒத்துப் போக முடியாது. தூக்கம் வராது. லோலோன்னு புத்தி பறக்க ஆரம்பிக்கும். சகலமும் தப்புன்னு படும். Very good  படு..,  படு… அனுபவம் சொல்லித் தரும். நான் சொல்றதை விட உனக்கு உன் அனுபவம் தெளிவு கொடுக்கும்”


“”மொறைக்கறதை விட முழிக்கறது நல்லதுன்னு சும்மா இருக்கேன்”

“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஷ்டம். ஒவ்வொரு விதமான வேதனை. உனக்கு உன் வேதனை. எனக்கு என் வேதனை. யாருதான் இங்க நல்லா இருக்காங்க. ஒருத்தர் கூட இல்லை.”


“துலுக்கரு பூந்த வியாபாரம் தோற்றதே கிடையாது. ஏன் சொல்லு, கட்டுமானம். துட்டு வூட்டு உள்ளாற சுத்தும், வெளியே போவாது. அப்பாகிட்ட புள்ளை கடன் வாங்கும். தேதி சொல்லி திருப்பிக் கொடுக்கும். பொண்ணு கட்ட  சம்பாதிக்கணும், சம்பாதிக்கிற புள்ளைக்குத்தான் பொண்ணு கிடைக்கும்”


“யப்பா!... ..தாரிணி இப்பொழுது எழுந்து நின்றால்?  வெள்ளிப் பாவாடையும், பிரிந்த சட்டையுமாய் எழுந்து நின்றால்…?

             ‘இனிவரும் முனிவரும்

              தடுமாறும் கனிமரம்’ “

“”.தொடர்ந்து யோசிக்கிறவன் ஞானி. முடியாதவன் மிருகம். யோசனை பண்ணினதின் விளைவு இன்றைய வாழ்க்கை, வளர்ச்ச்சி.


யோசனை பண்ணியும், வேதனை போகலையே, குழப்பம் தீரலையேன்னு கோபம் வரும். படர்ந்து வரவரக் கொடிக்குத்தான் problem. பாறாங்கல்லுக்குப் பிரச்னை இல்லை. அன்னியிலேயிருந்து இன்னி வரைக்கும் மிருகத்துக்கும் பிரச்னை இல்லை. பசிதான் பிரச்னை. நம்க்கு ஆயிரம்..”


“வளர்ச்சின்னா இடைஞ்சல் உண்டு. இடைஞ்சலைத் தாண்டறதுதான் வளர்ச்சி”


“பாறைக்கு பிரச்னை இல்லை. மிருகம் மாதிரி இரை தேடற சுபாவம் இல்லை. இரையும் தேடி, ஞானமும் தேடி… அடடா  என்ன சுகம்!  எப்படிப்பட்ட போராட்டம்”

“அந்தகரணம் என்பது  தன்னுள் தான் இறங்குதல். பார்வையை உள்பக்கம் புரட்டிப் பார்த்தல். தன்னை அறிதல்”

                                        .............இன்னமும் தொடரும் 

என்றென்றும் அன்புடன் 
நூர்தீன்