இந்த வலைப்பதிவில் தேடு

25 நவம்பர், 2020

ஒரு காதல் கவிதை - இதயத்தை ஒரு தூரிகையாய் செய்து…..

இதயத்தை ஒரு தூரிகையாய் செய்து…..




உலகின் விஷங்களை வெல்லவோ

உன் முகத்தில் இரண்டு கண்கள்?

 


உன் பார்வை

உன் கண்களுக்கு

சுவாசமாயிருப்பது போலும்!

 

ஆசையோடு

நெஞ்சு முழுவதையும் விரித்து

உன் பார்வைகளை

அள்ளிய போது

நான் வானமாயிருந்து

நட்சத்திரங்களை அள்ளிக்

கட்டிக் கொண்டதாய்

உணர்ந்தேன்

 

பூவின் விரகத்தை

நாசி உணர்வதென

உன் பார்வைகளென்னிடம்

உணர்ந்ததுண்டோ?

 

என்னுள் நிறைந்து குவியும்

சூனியச் சுருள்களை

விரித்து விரித்து, அவை

என்ன எழுதுகின்றன?

இந்த வினாடிகளின் ஏக்கத்துக்காகவே

அத்தனைக் கதிர்களும்

அத்தனைப் பூவிரலாய்

என் நரம்புகளில்

எந்த ராகங்கள் தேடி

அலைகின்றன?

 

இவ்வளவு மின்னல்களும்

மேய்ந்துதானோ

என் வானம்

இவ்வளவு சுத்தமாயிருக்கிறது?

 

என்னுள்

புதுப்புது விடியல் முளைகளை

எழுப்பும்

பூவாளித் தூவல்களை

பார்வைகள் என்றோ

சொல்வேன் தோழி ?

 

உன் பார்வையின் ஸ்பரிசத்தால்

என்னுள் அவைகள் உறைந்து

அந்த நிச்சலனத்தின்றோ

என் ஆன்மாவின் சுருதியை

முதன்முதல் கேட்டேன்.

 

நீ…… பார்க்கவில்லை

சரி பார்க்கிறாய்.

 

மூடிய மொக்கின் ரகசியமாய்

உன்

ஆரம்பகாலக் கனவுகளில்

படிகமிட்டதோர்

காதல் மிக்க சாயையுடன்

என்னை ஒப்பிட்டு ---

 

. நீ பார்க்கவில்லை

சரி பார்க்கிறாய்

 

எப்பொழுதேனும்

உன் விழிக்கரையில்

உன் ஆழங்களின் ரகசியம்

கடற்கன்னி போல்

வரும்; கண்ணயரும்.

 

எப்பொழுதுமேநான்

பொழுதுகள் தேங்கும் உன்

முற்றத்தில்

பெருமூச்சுக்கள் துடுப்பிடும்

தோணியாய் உலாவுவேன்

 

உன் விழிகளினமுதம்

என்னுள்ளிறங்கி

என்னைப் புதுப்பித்திருக்கும்

இவ்வேளையில்

நான் புரிந்து கொள்கிறேன்.

இத்தனை வருஷங்களைத்

தாண்டி வந்தேன்;

 

இந்தப் புதிர்கள் முன் பிரிக்கவே

இத்தனை அறிவிலும்

புகுந்து வந்தேன்;


இவற்றின் சாயல்களைச்

சிந்திக்கவே

இத்தனைக் காலம்

இதயத்தை ஒரு தூரிகையாய்

செய்து கொண்டிருந்தேன்.


- பெயர் தெரியவில்லை



23 நவம்பர், 2020

கவிக்கோ. வின் வெளிப்பாடு கவிதை

கவிக்கோ அப்துல் ரகுமானின்  

வெளிப்பாடு 

கவிதை

தினமணி கதிர், ஆகஸ்டு 7, 1994



22 நவம்பர், 2020

மதுக்கூர் கண்ணன் கவிதைகள்

மதுக்கூர் கண்ணன் கவிதைகள்


சிவப்பு மேகங்கள் 

ஒரு பூ – தோட்டம் போடுகிறது



நீ
எழுந்து வந்தால்
முகம் பார்ப்பாய்என்றே
புற்களெல்லாம்
சின்னஞ்சிறு கண்ணாடிகளைச்
சேமித்துக் கொண்டு 
காத்திருக்கின்றன  ! 


உன்
புன்னகையைப் பார்த்து
விதை வெட்கப்பட்டு
ஈர மணலை எடுத்து
இழுத்துப் போர்த்திக் கொண்டது !

உன் கரம் பட்ட
தண்ணீர் என்பதற்காகவா
இந்த வேர்கள்
இவ்வளவு வேகமாக
அந்த நீரை
உறிஞ்சுகின்றன?

💚💚💚💚💚💚

வசந்தத்தின் தூரிகைகள்

சங்கீதம்

இனிமையானதுதான் – நீ

பேசாத போது

…..     ……   …..

அம்புகளை

விழிகளில் வைத்திருந்தும்  -

‘அகிம்சைப் புன்னகை’

பூக்கிறதே ! – எப்படி ?


💜💜💜💜💜💜💜💜💜💜

காதலை வாங்கு , கனவுகள் இலவசம்


கண்ணே
!

கண் கலங்காதே
மீன்குளமாகிறது.

….   …..   …..

காந்தியத்தை
படுக்கையறையிலும்
கடைப்பிடித்தது
தவறுதான் !
இடு அமீனை விரும்புபவள் நீ
என்பது
இப்பொழுதல்லவா
தெரிகிறது?

💕💕💕💕💕💕💕💕

முற்றிய இரவுகளில்
மூட்டைப் பூச்சிகள்உன்
அந்தரங்கத்தை
ஆராய்வதும்,
காதுகளின் கரைகளில்
கொசுவினர் பேசுவதும்
உன்னைக்
கோபப்படுத்தவில்லையா?
அவைகளில்
ஆண்வர்க்கமும்
இருப்பதை நீ
அறியவில்லையா?
 

நீ சிரித்த
சத்தத்தைக் கேட்டு
ஒரு சிறுவன்
ரூபாய் நோட்டுடன்
வந்திருக்கிறான்…..
சில்லறை வேண்டுமாம் !

💝💝💝💝💝💝💝💝

இன்னும்…..
இலை உதிரவில்லை

…….

முன்பெல்லாம்
உண்ணிப் பூக்கள்
மாநாடு நடத்தும்
மலைப்பகுதிகளில்
சூரியன் சம்மணமிட்ட
மாலை நேரங்களில்
உன்னுடன் நான்
உலா வரும்போது
உனக்கும் சேர்த்து
நான் சுவாசிப்பேனே
ஞாபகமிருக்கிறதா?



அந்த சுகந்த

நேரங்களில்
அடம் பிடித்து நீ
அழும்போதெல்லாம்
உன்னுடைய
மூக்குத்துக் கற்களின்
எண்ணெய்க் கறையை
எனது-
ஈர உதடுகளால்
எடுத்து விடுவேனே
ஞாபகமிருக்கிறதா?
 


ஊசிக்காதுகளில் கூட
என் பெயரை
உச்சரித்து, உச்சரித்துநீ
பின்னிக் கொடுத்த
ஸ்வெட்டர் மட்டுமே
என்னுடலை  -
இறுகத் தழுவி
கொண்டிருப்பதாய்
எண்ணி விடாதே !
இப்போது
சாவுக் கன்னியும்
கூடத்தான்
என்னுடன்
சரஸமாடிக் கொண்டிருக்கிறாள்

💓💓💓💓💓💓💓