மதுக்கூர் கண்ணன் கவிதைகள்
சிவப்பு மேகங்கள்
ஒரு பூ – தோட்டம் போடுகிறது
நீ
எழுந்து வந்தால் –
‘முகம் பார்ப்பாய்’ என்றே
புற்களெல்லாம்
சின்னஞ்சிறு கண்ணாடிகளைச்
சேமித்துக் கொண்டு காத்திருக்கின்றன !
புன்னகையைப் பார்த்து
விதை வெட்கப்பட்டு
ஈர மணலை எடுத்து
தண்ணீர் என்பதற்காகவா
இந்த வேர்கள் –
இவ்வளவு வேகமாக
அந்த நீரை
வசந்தத்தின் தூரிகைகள்
சங்கீதம்
இனிமையானதுதான் – நீ
பேசாத போது
….. …… …..
அம்புகளை
விழிகளில் வைத்திருந்தும்
-
‘அகிம்சைப் புன்னகை’
பூக்கிறதே ! – எப்படி ?
💜💜💜💜💜💜💜💜💜💜
காதலை வாங்கு , கனவுகள் இலவசம்
கண் கலங்காதே
மீன் – குளமாகிறது.
…. ….. …..
காந்தியத்தை
படுக்கையறையிலும்
கடைப்பிடித்தது
தவறுதான் !
இடு அமீனை விரும்புபவள் நீ
என்பது –
இப்பொழுதல்லவா
💕💕💕💕💕💕💕💕
மூட்டைப் பூச்சிகள் – உன்
அந்தரங்கத்தை
ஆராய்வதும்,
காதுகளின் கரைகளில்
கொசுவினர் பேசுவதும்
உன்னைக்
கோபப்படுத்தவில்லையா?
அவைகளில்
ஆண்வர்க்கமும்
இருப்பதை நீ
அறியவில்லையா?
நீ சிரித்த
சத்தத்தைக் கேட்டு
ஒரு சிறுவன் –
ரூபாய் நோட்டுடன்
வந்திருக்கிறான்…..
💝💝💝💝💝💝💝💝
இன்னும்…..
இலை உதிரவில்லை
…….
முன்பெல்லாம்
உண்ணிப் பூக்கள்
மாநாடு நடத்தும்
மலைப்பகுதிகளில்
சூரியன் சம்மணமிட்ட
மாலை நேரங்களில்
உன்னுடன் நான்
உலா வரும்போது
உனக்கும் சேர்த்து
நான் சுவாசிப்பேனே…
ஞாபகமிருக்கிறதா?
நேரங்களில்
அடம் பிடித்து நீ
அழும்போதெல்லாம்
உன்னுடைய
மூக்குத்துக் கற்களின்
எண்ணெய்க் கறையை
எனது-
ஈர உதடுகளால்
எடுத்து விடுவேனே…
ஞாபகமிருக்கிறதா?
ஊசிக்காதுகளில் கூட
‘என் பெயரை’
உச்சரித்து, உச்சரித்து – நீ
பின்னிக் கொடுத்த
ஸ்வெட்டர் மட்டுமே
என்னுடலை -
இறுகத் தழுவி
கொண்டிருப்பதாய்
எண்ணி விடாதே !
இப்போது
சாவுக் கன்னியும்
கூடத்தான்
என்னுடன்
சரஸமாடிக் கொண்டிருக்கிறாள்
💓💓💓💓💓💓💓
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக