பருவங்கள்
காத்திருந்த பொழுதினில்
கண்ணில் பட்ட கவிதை நூலில்
பிடிச்சுப் போன கவிதைகள் இரண்டை
மனசுக்குள் குறித்துக் கொண்டுமாச்சு !
தேடிப் பிடித்த வார்த்தைகள்
சிக்கித் தவிக்க
புதிய கவிதையொன்று
மனசுக்குள் நெய்துமாச்சு !
வீணை வகுப்புக்குச் சென்று
வீணாய் என் பொழுதைக்
கழிக்க விட்ட தோழி !
உனக்கெப்படி பொழுது
உருப்படியாய் ஆச்சு ?
பிரதிபலிப்பு:
வெளிச்சப் பிரவாகம்
என் மீது விழும்
மண் மீது விழும்
மனசு :
முன்னே சென்றால் துரத்திக் கடிப்பேன்
பின்னே போனால் எட்டி உதைப்பேன்
கீழே கிடந்தால் மிதித்து நசுக்குவேன்
மேலேற முற்சித்தால் கால் தூக்கி
மண்ணில் தள்ளுவேன்
கூடவே ஓடி வர வேகமோ தெம்போ உனக்கில்லை
ஒன்று செய்
பேசாது ஒதுங்கி ஓய்வெடு
காத்துக் கிட
ஓடிக் களைத்து நுரை ததும்பும் வாயோடு
வருவேன் வாலாட்டிக் கொண்டு
உன் நிழலில் பதுங்க.
------------------------------------------------------------------
சொரணை
நிழல்
கண்ட இடத்தில்
நீள
வாலையும். காதையும்
மட்டும்
ஆட்டிக்
கொண்டும்
அசை
போட்டபடியும்
படுத்திருக்கிறது
எருமை மாடு
தன்
மேல் அமர்ந்து
தன்
காதுக்குள் அலகு
நீட்டி
பூச்சிகள்
பிடித்துண்ண
அனுமதிக்கிறது
சிறு
பறவையை.
இருந்தாலும்
ஒரு
சிறு குச்சி
போதும்
எழுந்தோடவோ
எதிர்த்து
சீறவோ அதற்கு.
ஆனாலும்
கண்முன்
காணும் அவலத்தை
காணாதது
போல் கடந்து
போகும்
மனிதன்
சொல்கிறான்
சொரணையில்லா
ஜீவனென எருமையை
--- - தமிழமுதன்
04.07.2025






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக