இந்த வலைப்பதிவில் தேடு

15 ஜனவரி, 2021

மண்வாசனை படத்தில் வைரமுத்துவின் காதல் கவிதைகள்

பாரதிராஜாவின் "மண்வாசனை " படத்தில் வைரமுத்துவின் காதல் கவிதைகள்


அவள் யார்?

யாரவள்?

இந்தக் கிராமத்து நுழைவாயில்
என்னை வரவேற்க வந்த வானவில்லா?
 
விடிந்தும் விடியாத இரவை
இன்றுதான் பார்த்தேன்
நான்
அவளின் கண்களைச் சொல்கிறேன்!
 
கிளி வந்து இன்னும்
கொத்திச் செல்லாத அத்திப் பழங்கள்
நான்
அவளின் இதழ்களைச் சொல்கிறேன்!
 
பளிங்குத் தரையில்
அள்ளி இறைத்த
வெள்ளிக் காசுகள்
நான்
அவளின் சிரிப்பைச் சொல்கிறேன்!
 
போகப் போக
என் டைரியின்
எழுதப்படாத பக்கங்களிலெல்லாம்
இதை விட

இன்னும் சொல்கிறேன்!


உன்னை முதன்முதலாகப்
பார்த்தபோது
என் கண்களுக்குக்
கௌரவம் கிடைத்ததே
என்று கர்வப்பட்டேன்
 
  
இன்று
நான் குருடனாய் இல்லையே
என்று துக்கப்படுகிறேன்
 
கிராமத்துக் கிளியே !
உனக்காக
என் மனசின் கிளைகளில்
ரகசியமாய்க்
கட்டிய கூடுகளை
கலைத்துக் கொண்டிருக்கிறேன்
 
தென்றலே
உனக்காக நான்
திறந்து வைத்த
ஜன்னல்களை எல்லாம்
இன்று
சப்தமில்லாமல்
   
சாத்தி கொண்டிருக்கிறேன்


கருத்துகள் இல்லை: