இந்த வலைப்பதிவில் தேடு

19 டிசம்பர், 2020

நான் ரசித்த அறிவுமதி, ரவி சுப்ரமணியம் & உத்ராடன் கவிதைகள்

நான் ரசித்த கவிதைகள்

அறிவுமதி, ரவி சுப்ரமணியம் ஜெயந்தி குமார்& உத்ராடன்


கிளி ஜோசியம் பார்ப்பது 
மூட நம்பிக்கைதான்
ஆனால் பரவாயில்லை
கிளி ஜோசியம் பாருங்கள்

இருபத்தி நாலு 
மணி நேரமும்
கூண்டுக்குள்ளேயே
அடைபட்டுக்கிடக்கும்
அந்த சிறகிழந்த கிளிக்கு
சில நிமிஷங்களாவது
விடுதலை கிடைக்கட்டும்.
பாவம், பசியால் வாடும்
அந்த பச்சைக் கிளிக்கு
ஒரு நெல் மணியாவது
கொறிக்கக் கிடைக்கும்

கிளி ஜோசியம் பார்ப்பது 
மூட நம்பிக்கைதான்
ஆனால் பரவாயில்லை
கிளி ஜோசியம் பாருங்கள்

- எஸ். அறிவுமணி

______ ______ ______ ______ ______ ______


பயமில்லை :

அடர்ந்த காட்டின் 
ஊடே பயணம்
எங்கும் இருள்
மிருகங்களின்
உறுமல்கள்
பறவைகளின் அலறல்கள்
வான் தொட முயலும்
மரங்களின்
கிளை உரசும் ஓசைகள்
'ச்சோ'வெனும் அருவி
|
'தளக், தளக்' கெனும் ஆறு
ஆனாலும் மனிதனில்லை
அதனால் 
பயமுமில்லை.

- ரவி சுப்ரமணியம்
---------  ------------------  --------- --------- 



______ ______ ______ ______ ______ ______

கூடு கட்டும் பறவைகள்
வீடு கட்டும் மனிதர்கள்
காடு மலைகளில் விலங்குகள்
ஓடெடுத்து பண்டாரங்கள்
தேவியே தேவியே
திருமாங்கல்யம் பத்திரம்
மூதியே மூதியே
முட்டாள்தனம் விட்டுரணும்
சிங்கார வேலனைக் கும்பிட வேண்டும்
செங்கமலத் தாயாரை சேவிக்க வேணும்
ஜென்மம் தொலைக்க வேணும்
சீக்கிரமே சாவு வந்து சேரணும்

- உத்ராடன்

______ ______ ______ ______ ______ ______


யாரிடம்
இருக்கிறது'.... ?
அந்த பலூன்காரனின்
கடைசி மூச்சடங்கிய
பலூன்...

- ஜெயந்தி குமார்




கருத்துகள் இல்லை: