இந்த வலைப்பதிவில் தேடு

10 ஜனவரி, 2021

2. ஆனந்த விகடன் முத்திரை கவிதைகள் 2

ஆனந்த விகடன் 
பவள விழா முத்திரை கவிதைகள் 

2

முத்திரை கவிதைகள் படைத்தோர்களுக்கு எம் நன்றிகள் :

தாஜ், மனுஷ்ய புத்திரன், கனிமொழி, பொன்.சுதா

கல்யாண்ஜி, மேஹாஷ், இளம்பிறை, க.சரவணன்,

வித்யாஷங்கர்,  நா.முத்துக்குமார்,  வெண்ணிலா, நிலாக்குட்டி,

நெல்லை ஜெயந்தா, ஜெயந்த், ஜி. விஜயலெட்சுமி

மற்றும் ஆனந்த விகடன்

       17.11.20027.11.2002




எதிர்பார்ப்பு :


வீட்டுக்குள்
கூட்டிப் பெருக்கி
சமைத்துக் கழுவி
துவைத்துப் பிழிந்து
களைத்துப் போன
மனைவிகள் காத்திருக்கிறார்கள்
கணவனின் விடுமுறையில்
ஊர், உலகு பார்க்க...

உறங்கப் பொழுதின்றி
ஊர் உலகு சுற்றி
உழைத்துக் களைத்து
சலித்துப் போன
கணவர்கள் காத்திருக்கிறார்கள்
தனது விடுமுறையில்..
வீட்டில் ஓய்வெடுக்க

- பொன்.சுதா













கருத்துகள் இல்லை: