இந்த வலைப்பதிவில் தேடு

1 ஜனவரி, 2021

நான் ரசித்த ட்வீட்டர் கவிதைகள் - 3

நான் ரசித்த ட்வீட்டர் கவிதைகள் - 3


சேய் அசைக்கும்
வாய் அசைவிற்கான
மெய்ப்பொருள்
தாய்க்குத் தான் தெரியும்

பாலசுப்ரமணி @balasubramni1

பெண்மையெனும்
பெருந்தவம்..
தாய்மையெனும்
பேரன்பினால்
முழுமை பெறுகிறது...!

- im_Navyaa

உங்களால் அடைய முடியாமல் போன ஒன்று 
உங்கள் முன்பு அடிக்கடி வந்து போவதை 
உங்களால் தடுத்து விட முடியாது..!!

Sumi_Twitz_


இது என்னுடையது 
என்று நினைக்கும்
வரை எதையும் விட்டுக்
கொடுக்கத் தயாரில்லை

எதுவும் என்னுடையதல்ல
எனும் பக்குவம் வரும்போது  
விட்டுக் கொடுக்க நம்மிடம்  
எதுவும் இருப்பதில்லை

- யாதுமானவன்


என்ன வேண்டுதலோ

அங்கப்பிரதச்சிணம்

செய்கிறது இலையில் 

விழுந்த மழைத்துளி....! 

- விஷ்வா



கருத்துகள் இல்லை: