இந்த வலைப்பதிவில் தேடு

9 ஜனவரி, 2021

1. ஆனந்த விகடன் முத்திரை கவிதைகள் 1

ஆனந்த விகடன் 
பவள விழா முத்திரை கவிதைகள் 1

முத்திரை கவிதைகள் படைத்தோர்களுக்கு எம் நன்றிகள் :

தாஜ், வித்யாஷங்கர், பா.சத்தியமோகன், ஜெயபாஸ்கரன்,

எஸ்.பாபு, ஆனந்த் ராகவ், மகுடேஸ்வரன், அண்ணாமலை,

ஆதி, சிவராஜ், சுகுமாரன், பா.கீதா வெங்கட்,

க்ருஷாங்கினி, கலாப்ரியா மற்றும் ஆனந்த விகடன்

17.11.2002 

    









வலியின் ஒலி

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்

கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை
- மகுடேஸ்வரன்









கருத்துகள் இல்லை: