தமிழ்வாணன்,சுஜாதா, பாலகுமாரன், புதுக்கவிதைகள் என்று வயதுக்கேற்ப மாற்றங்களடைந்தது என் வாசிப்பு. ரசித்தவற்றை நோட்டுப் புத்தகங்களிலும், கிழித்து வைத்தும் பத்திரப்படுத்தினேன்.என் சேகரிப்புக்கள் செல்லரிப்பதைத் தடுத்து அவற்றின் ஆயுளை நீட்டிக்கும் வகையில் டிஜிட்டல் உலகிற்குள் பதிவு செய்கிறேன். சிலவற்றை எழுதியவரே கூட மறந்திருக்கலாம். அவர்களின் அனுமதியின்றி பதிவதற்கு மன்னிக்க வேண்டும். அவர்கள் எழுத்துக்களை 25 ஆண்டுகளாக ரசிக்கிறோம் என்பதும் அவர்களுக்குப் பெருமையே.
இந்த வலைப்பதிவில் தேடு
17 ஜூலை, 2021
25 ஜனவரி, 2021
கமலஹாசன் கவிதைகள்
கமலஹாசன் கவிதைகள்
மனித
வணக்கம்
தாயே,
என் தாயே!
நான்
உரித்த
தோலே
அறுத்த
கொடியே
குடித்த
முதல் முலையே,
என்
மனையாளின்
மானசீகச்
சக்களத்தி, சரண்.
தகப்பா,
ஓ தகப்பா!
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது
கவிதைகளாய் இன்று
புரியாத
வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை
நான் சொல்லுகின்றேன்.
தமயா,
ஓ தமயா!
என்
தகப்பனின் சாயல் நீ
அச்சகம்
தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள்
வெவ்வேறு!
தமக்காய்,
ஓ தமக்காய்!
தோழி,
தொலைந்தே போனாயே
துணை
தேடி போனாயோ?
மனைவி,
ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான்
தாண்டக்குமைந்திடுவாய்
சாத்திரத்தின்
சூட்சுமங்கள் புரியும்வரை.
மகனே,
ஓ மகனே!
என்
விந்திட்ட விதையே
செடியே,
மரமே, காடே
மறுபிறப்பே
மரண
சௌகர்யமே, வாழ்!
மகளே,
ஓ மகளே!
நீயும்
என் காதலியே
எனதம்மை
போல..
எனைபிரிந்தும்
நீயின்பம் காண்பாயா?
இல்லை,
காதலித்த
கணவனுக்குள் எனைத் தேடுவாயா?
நண்பா,
ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான்
செய்த அன்பின் பலன்
இவ்விடமும்
அவ்விதமே.
பகைவா,
ஓ பகைவா!
உன்
ஆடையெனும் அகந்தையுடன்
எனதம்மணத்தைக்
கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின்
விளம்பரங்கள்.
மதமென்றும்,
குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி
விடும்
நிர்வாணமே
தங்கும்.
வாசகா,
ஓ வாசகா!
என்
சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால்
புன்னகை செய்.
புதிரென்றால்
புருவம் உயர்த்து.
பிதற்றல்
எனத்தோன்றின்
பிழையும்
திருத்து.
எனது
கவி உனதும்தான்.
ஆம்,
நாளை
உன் வரியில் நான் தெரிவேன்
கவிதைநூல்
வெளியீட்டு விழாவில் கமல் வாசித்த கவிதை
இது
18 ஜனவரி, 2021
எம்.ஜி.ஆருக்கு கவிஞர் வைரமுத்துவின் கவிதாஞ்சலி
எம். ஜி. ஆருக்கு கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதாஞ்சலி
ரோஜாக்களே !இனியாருக்காக பூப்பூப்பீர்கள்?
அலைகளே !இனியாருக்காகக் கை தட்டுவீர்கள்?
சாலைகளே !இனியார் வருகைக்காகக்காத்திருப்பீர்கள்
ஒருபுன்னகை ராஜாங்கம்போய் விட்டது !
கவிஞர்களின் காதலன்காலமாகி விட்டான் !
வற்றிப் போகாதவரலாறே !
உன்னை நேசிக்கும் நெஞ்சங்கள்நடிப்பில் கூடஉன்னைஇறக்க விட்டதில்லையே !நிஜத்தில் இறந்தாயேநியாயமா?
தென்னகத்தையேசென்னைக்கு வரவழைத்து விட்டுநீயெங்கோ போய் விட்டாய்நீதியா?
உன் தொண்டர்கள்மாலைகள்தான்வாங்கினார்கள்
மாலையில் வாங்கியமாலைகள்காலையில் பார்த்தால் மலர் வளையல்கள் !
ஒரு நாள் -எனக்கு நீவிருதளித்தாய் !தங்கம்தான் விருதென்றுஎல்லோரும் நினைத்தார்கள்நான் மட்டும் நினைத்தேன்உன்விரல் தொட்டதேவிருதென்று
உன் வயதுஒரு நூற்றாண்டுக்குள் ;உன் வாழ்க்கையோசில நூற்றாண்டுகள்
காலடிச் சுவடுகள்அழிந்து விடும் !காலச் சுவடுகள்அழிவதில்லை !
கிராமத்துக் காற்றில்கலந்திருக்கும் உன் கீதங்கள் !
வெள்ளித்திரையில் நீ ஓட்டியகுதிரைகளின்குளம்படிச் சத்தம் !
காது மடல்களில்ஒட்டிக் கொண்டிருக்கும்உன் உச்சரிப்பு !
இதயச் சுவர்களில்எழுதப்பட்டிருக்கும்உன்ராஜ சித்திரம் !
பாமர மக்களைநிஜமாய் நேசித்தநேசம் !
இவையெல்லாம் உன்காலச் சுவடுகள்
காலடிச் சுவடுகள்அழிந்து விடும் !காலச் சுவடுகள்அழிவதில்லை !
யாருடைய சாவுக்கும்மரணம் மட்டும்வருத்தப்படுவதில்லை
ஒரு நாள்மரணத்திற்குமனசாட்சி வந்தால்உன்னிடம் மட்டும் வந்துமன்னிப்பு கேட்கும்
17 ஜனவரி, 2021
"கடலோரக் கவிதைகள்" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்
கடலோரக் கவிதைகள்
திரைப்படப் பாடல் ஒலிநாடாவில்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளை பாரதிராஜா தன் குரலில் வாசித்த கவிதைகள்
"வேதம் புதிது" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்
பாரதிராஜாவின் "வேதம் புதிது" திரைப்படத்தில் வைரமுத்துவின் கவிதைகள்
அன்பே !
அந்த நதிக்கறையில்
உன் கைக்குட்டை ஒன்றைக்
கண்டெடுத்தேன் !
அது கைக்குட்டையா?
இல்லை
காதல் தேவதை
தன் ஒரு சிறகை
உதிர்த்து விட்டுப்
போய் விட்டதா?
இது கைக்குட்டைதானா?
இல்லை
கல்யாணப் புடவைக்கு
அச்சாரமா?
நீ
வித்தியாசமானவன்
காதல் கடிதத்தை
நெசவு செய்து அனுப்பியவன்
நீ மட்டும்தான்
இப்படித்தான்
பேச நினைக்கிறேன்
ஏதேதோ அர்த்தத்தில்
ஆனால் என் வார்த்தைகளோ
மௌனத்தின் கர்ப்பத்தில்
கண்ணே !
நான் வேதம் ஓத
ஆசைப்பட்டதே
கடவுளைக் காண அல்ல
கண்மணி !
என் காதலியே !
உன்னைக் காண.
நானோ
ஒரு அரசன் தானம்
கேட்பது போல் யாசிக்கிறேன்
நீயோ
நீச்சல் தெரியாத ஒருத்தி
குளத்தில் குதிப்பது போல்
யோசிக்கிறாய்
அது எப்படி?
உன் குடத்தில் இருந்து தண்ணீரும்
வாயிலிருந்து வார்த்தைகளும்
சிந்துவதேயில்லையே !
ஒரு வார்த்தை சொல்லி விடு !
உன் சொல்லுக்குப் பிறகுதான்
இந்தப் பிரபஞ்சம்
அசைவதா? இல்லையா?
என்று ஆலோசிக்கும்.
பிறை நிலவு
தன் மெளனத்தை மறைக்க
இரவு கூட உறங்கி விட்டது
முன் வைத்த காலை
பின் வைப்பதென்ன
நடுக்கம் பிறக்கின்றதா?
இலைகள் அசையும்
ஒலியில் கூட
இதயம் துடிக்கின்றதா?
அச்சத்தில் பாதி
ஆசையில் பாதி
பெண்மை நடக்கின்றதா?
உள்ளம் எங்கும்
வெள்ளம் ஓடும்
மெளனம் கூட
சப்தம் போடும்
ஜீவன் தவிக்கின்றதா?
தேகம் கொதிக்கின்றதா?
கண்மணி
கண்மணி
உன் முகம் கண்டிடக்
கண்கள் துடிக்கிறது
முல்லை இளங்கொடி போகையில்
என்னுயிர் முள்ளில் நடக்கிறது.
சின்னமணிக் குடம்
சிந்தி வழிந்தது
என்னை அழைக்கிறது
கன்னி
உன் நெஞ்சினில் இல்லை
குடத்தினில் ஈரம் இருக்கிறது
இலையுதிர் காலம் என்பது
இறப்பல்ல
இன்னொரு பொழிப்புக்கான
தொடக்கம்
அஸ்தமனம் என்பது
மரணமல்ல
இன்னொரு உதயத்துக்கான
பதுக்கம்
கோடையில் காய்ந்த நதி
கார்காலத்தில் கரை புரள்கிறது
15 ஜனவரி, 2021
மண்வாசனை படத்தில் வைரமுத்துவின் காதல் கவிதைகள்
அவள் யார்?
யாரவள்?
இந்தக் கிராமத்து நுழைவாயில்
என்னை வரவேற்க வந்த வானவில்லா?
விடிந்தும் விடியாத இரவை
இன்றுதான் பார்த்தேன்
நான்
அவளின் கண்களைச் சொல்கிறேன்!
கிளி வந்து இன்னும்
கொத்திச் செல்லாத அத்திப் பழங்கள்
நான்
அவளின் இதழ்களைச் சொல்கிறேன்!
பளிங்குத் தரையில்
அள்ளி இறைத்த
வெள்ளிக் காசுகள்
நான்
அவளின் சிரிப்பைச் சொல்கிறேன்!
போகப் போக
என் டைரியின்
எழுதப்படாத பக்கங்களிலெல்லாம்
இதை விட
நான் ரசித்த பழைய புதுக்கவிதைகள்
பழைய புதுக்கவிதைகள்
காதல்:
ஆடையின் விலை பார்ப்பதில்லை
முடியைத் தடுத்த
முகத்தின் எழிலைக் காண்பதில்லை
தருவது ஒன்று
பெறுவது ஒன்று
தொழில்முறையின் தலைவிதி
விலை பார்க்காது
எழில் கரையாது
தருவது ஒன்று
பெறுவதும் அதுவே
காதல் தொழிலின் கணக்கு
-
சு.சங்கரசுப்ரமண்யன்
நான் ரசித்த ஹைக்கூ கவிதைகள்
நான் ரசித்த ஹைக்கூ கவிதைகள்
யுத்தம் முடிந்த பின்னே
தாய் மரம் பூத்திருக்கிறது
திரும்பிப் பார்க்கையில்
என் காலடிச் சுவடுகள் கூட இல்லை
வார்த்தைகளை ஒப்படைத்து
தள்ளி அனுப்புகிறேன்
மரக்குதிரைகள்
அருகருகில்
பாடல் சமர்ப்பிக்கும்
தவளை
கைகளையும் கால்களையும்
தேய்த்துக் கொண்டிருக்கிறது
ஈ