எம். ஜி. ஆருக்கு கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதாஞ்சலி
ரோஜாக்களே !இனியாருக்காக பூப்பூப்பீர்கள்?
அலைகளே !இனியாருக்காகக் கை தட்டுவீர்கள்?
சாலைகளே !இனியார் வருகைக்காகக்காத்திருப்பீர்கள்
ஒருபுன்னகை ராஜாங்கம்போய் விட்டது !
கவிஞர்களின் காதலன்காலமாகி விட்டான் !
வற்றிப் போகாதவரலாறே !
உன்னை நேசிக்கும் நெஞ்சங்கள்நடிப்பில் கூடஉன்னைஇறக்க விட்டதில்லையே !நிஜத்தில் இறந்தாயேநியாயமா?
தென்னகத்தையேசென்னைக்கு வரவழைத்து விட்டுநீயெங்கோ போய் விட்டாய்நீதியா?
உன் தொண்டர்கள்மாலைகள்தான்வாங்கினார்கள்
மாலையில் வாங்கியமாலைகள்காலையில் பார்த்தால் மலர் வளையல்கள் !
ஒரு நாள் -எனக்கு நீவிருதளித்தாய் !தங்கம்தான் விருதென்றுஎல்லோரும் நினைத்தார்கள்நான் மட்டும் நினைத்தேன்உன்விரல் தொட்டதேவிருதென்று
உன் வயதுஒரு நூற்றாண்டுக்குள் ;உன் வாழ்க்கையோசில நூற்றாண்டுகள்
காலடிச் சுவடுகள்அழிந்து விடும் !காலச் சுவடுகள்அழிவதில்லை !
கிராமத்துக் காற்றில்கலந்திருக்கும் உன் கீதங்கள் !
வெள்ளித்திரையில் நீ ஓட்டியகுதிரைகளின்குளம்படிச் சத்தம் !
காது மடல்களில்ஒட்டிக் கொண்டிருக்கும்உன் உச்சரிப்பு !
இதயச் சுவர்களில்எழுதப்பட்டிருக்கும்உன்ராஜ சித்திரம் !
பாமர மக்களைநிஜமாய் நேசித்தநேசம் !
இவையெல்லாம் உன்காலச் சுவடுகள்
காலடிச் சுவடுகள்அழிந்து விடும் !காலச் சுவடுகள்அழிவதில்லை !
யாருடைய சாவுக்கும்மரணம் மட்டும்வருத்தப்படுவதில்லை
ஒரு நாள்மரணத்திற்குமனசாட்சி வந்தால்உன்னிடம் மட்டும் வந்துமன்னிப்பு கேட்கும்
ரோஜாக்களே !
இனி
யாருக்காக பூப்பூப்பீர்கள்?
அலைகளே !
இனி
யாருக்காகக் கை தட்டுவீர்கள்?
சாலைகளே !
இனி
யார் வருகைக்காகக்
காத்திருப்பீர்கள்
ஒரு
புன்னகை ராஜாங்கம்
போய் விட்டது !
கவிஞர்களின் காதலன்
காலமாகி விட்டான் !
வற்றிப் போகாத
வரலாறே !
உன்னை
நேசிக்கும் நெஞ்சங்கள்
நடிப்பில் கூட
உன்னை
இறக்க விட்டதில்லையே !
நிஜத்தில் இறந்தாயே
நியாயமா?
தென்னகத்தையே
சென்னைக்கு வரவழைத்து விட்டு
நீயெங்கோ போய் விட்டாய்
நீதியா?
உன் தொண்டர்கள்
மாலைகள்தான்
வாங்கினார்கள்
மாலையில் வாங்கிய
மாலைகள்
காலையில் பார்த்தால்
மலர் வளையல்கள் !
ஒரு நாள் -
எனக்கு நீ
விருதளித்தாய் !
தங்கம்தான் விருதென்று
எல்லோரும் நினைத்தார்கள்
நான் மட்டும் நினைத்தேன்
உன்
விரல் தொட்டதே
விருதென்று
உன் வயது
ஒரு நூற்றாண்டுக்குள் ;
உன் வாழ்க்கையோ
சில நூற்றாண்டுகள்
காலடிச் சுவடுகள்
அழிந்து விடும் !
காலச் சுவடுகள்
அழிவதில்லை !
கிராமத்துக் காற்றில்
கலந்திருக்கும் உன் கீதங்கள் !
வெள்ளித்திரையில் நீ ஓட்டிய
குதிரைகளின்
குளம்படிச் சத்தம் !
காது மடல்களில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
உன் உச்சரிப்பு !
இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும்
உன்
ராஜ சித்திரம் !
பாமர மக்களை
நிஜமாய் நேசித்த
நேசம் !
இவையெல்லாம் உன்
காலச் சுவடுகள்
காலடிச் சுவடுகள்
அழிந்து விடும் !
காலச் சுவடுகள்
அழிவதில்லை !
யாருடைய
சாவுக்கும்
மரணம் மட்டும்
வருத்தப்படுவதில்லை
ஒரு நாள்
மரணத்திற்கு
மனசாட்சி வந்தால்
உன்னிடம் மட்டும் வந்து
மன்னிப்பு கேட்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக