பழைய புதுக்கவிதைகள்
காதல்:
அழுக்கைப் போக்க
ஆடையின் விலை பார்ப்பதில்லை
முடியைத் தடுத்த
முகத்தின் எழிலைக் காண்பதில்லை
தருவது ஒன்று
பெறுவது ஒன்று
தொழில்முறையின் தலைவிதி
விலை பார்க்காது
எழில் கரையாது
தருவது ஒன்று
பெறுவதும் அதுவே
காதல் தொழிலின் கணக்கு
ஆடையின் விலை பார்ப்பதில்லை
முடியைத் தடுத்த
முகத்தின் எழிலைக் காண்பதில்லை
தருவது ஒன்று
பெறுவது ஒன்று
தொழில்முறையின் தலைவிதி
விலை பார்க்காது
எழில் கரையாது
தருவது ஒன்று
பெறுவதும் அதுவே
காதல் தொழிலின் கணக்கு
கலைச்சிறை:
கல்லைக்
கொத்தி சிற்பம்
என்னைப்
போல நிற்கவாம்
சொல்லை
உழுது காவியம்
என்
பேரில் ஒலிக்கவாம்
திரையில்
மெழுகி ஓவியம்
என்னப்
போல் தெரியவாம்
ஆனால்
உளியின்
கூர்மழுங்கலில்
என்
உருவம் தேயும்
பேனா
மை உலர்தலிலே
என்
குரல் கம்மும்
தூரிகை
ரோம உதிர்தலிலே
என்
தோற்றம் அழியும்
அதனால்
தேய்வும்
கம்மலும் அழிதலுமே
எனக்குப்
பின்
உளியாலும்,
கோலாலும், பேனாவாலும்
வதைக்காதே
என்னை
கலைக்குள்
அடைக்காதே
சொன்னேன்
பாம்பைக் கண்டதும்- சி.சு செல்லப்பா
கல்லெடுத்தாய்
நான் கல்லானேன் !
வாளைக் கண்டதும்
வில்லை வளைத்தாய்
வாளுறையானேன் !
மதயானை வந்ததும்
அலறியடித்தாய்
வாலிலூசல் பயின்றேன் !
பின்னொரு நாள்
முச்சந்தியில்
சறுக்கி விழுந்து
செத்தேன் நான் !
பிழைத்தாய் நீ
வாழ்ந்து வாழ்ந்து
அழிந்தேன் நான்
-
சுந்தர
ராமசாமி
இலக்கிய
அனுபவம் :
சொல்வதிரண்டு
வகை
சிந்தித்து
சொல்லல்
சிந்தை
இலையாதல் !
கரகம்
அல்லது
கண்கட்டு:
இரண்டுக்கும்
பொருள்
சொன்னவன்
புலவன் !
கண்டவன்
கலைஞன் !
முழிப்பவன்
நீயும்
நானும் கேவலம்
வாசகக்கும்பல்..
!
-
தி.சு.வேணுகோபாலன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக