இந்த வலைப்பதிவில் தேடு

15 ஜனவரி, 2021

நான் ரசித்த ஹைக்கூ கவிதைகள்

நான் ரசித்த ஹைக்கூ கவிதைகள்


முன்பனி இரவில்
யாத்ரிகனின்
ஊசி நூல் தையல் 
- கொ. பயாஷி இஸ்ஸா (ஜப்பான்)

பழைய குளம் 
தவளை குதிக்கையில்
தண்ணீரில் சப்தம்

அழகான பட்டம்
வானேறி விட்டது
பிச்சைக்காரன் குடிசை மேல்

கோடைப் புல்வெளி
அந்த மாவீரர்களைன்
கனவுப் பாதையில்

நிசப்தம்
கற்களில் ஊறி விட
பூச்சிகள் சப்தம்

செவிட்டு ஊமைப் பிச்சைக்காரனின்
பிச்சைப் பாத்திரத்தை
மழை தட்டுகிறது
 
இடிந்த வீட்டில்
யுத்தம் முடிந்த பின்னே
தாய் மரம் பூத்திருக்கிறது

 
கோடை நதி
பாலம் இருந்தும்
குதிரை நீரில் நடக்கிறது
 
கடற்கரையில்
திரும்பிப் பார்க்கையில்
என் காலடிச் சுவடுகள் கூட இல்லை
 
குளித்து நனைந்த கூந்தல்
நான் போகுமிடமெல்லாம்
சொட்டுகிறது
 
மிதக்கும் விளக்கில்
வார்த்தைகளை ஒப்படைத்து
தள்ளி அனுப்புகிறேன்
 
இறந்த நண்பன்
தோளைத் தொடுவது போல
அறுவடை நாள் சூரியனின் உஷ்ணம்
 
திருவிழா முடிந்து
மரக்குதிரைகள்
அருகருகில்
 
இருபது பனிநிறை மலைகளின் மத்தியில்
ஒரு ஒரு சலனம்
கருங்குருவியின் கண்
 
தரையில் கை வைத்து
பாடல் சமர்ப்பிக்கும்
தவளை
 
மறுபடியும்
மலரிதழில்
மழையின் முணுமுணுப்பு.

கொல்லாதே
கைகளையும் கால்களையும்
தேய்த்துக் கொண்டிருக்கிறது



கருத்துகள் இல்லை: