இந்த வலைப்பதிவில் தேடு

30 டிசம்பர், 2020

நான் ரசித்த ட்வீட்டர் காதல் கவிதைகள்

நான் ரசித்த ட்வீட்டர் காதல் கவிதைகள் 

அழகென்று
சிறப்பாய் 
எதுவுமில்லை
பிடித்தவர்களின்
கண்களுக்கு முன்னே..
யாவும் அழகே.
- நீர்ப்பறவை@pithamagal


வெண்நிற வலம்புரி சங்கில்
சுழலுதடி 
கன்னங்கரிய பூமி பந்தாய் 
உன் கருவிழி..!

#அமுலுகுட்டி


நானே விரட்டினாலும்
தேடி வந்து 
ஒட்டிக்கொள்ள வேண்டும் 
நேசிக்கும் உறவானது..

-இம்சை பொண்ணு@swt_queen


  உன் நினைவுகளில் 
நிரம்பிய இரவின் 
கொள்கலன் சொல்லிப்போனது .. 
இந்த விடியலும் 
அவன் உரித்தானதென்று

#இவள்_420


உனக்கு பிடிக்கும் இடத்தில் 

நான் இல்லை என்றாலும்

நான் நினைக்கும் இடத்தில் 

நீ மட்டுமே

#Nathan


மனதை
கொத்திப்போடும்
மரங்கொத்தி (அவள்).

#இவள்_420



நேரம் போவது
தெரியாமல் பேசுங்கள்
நேரம் போக வேண்டும்
என்று  பேசாதீர்கள்

-Shenbagum@shenbacute


நீங்கள் தரும்
ஒவ்வொரு வலியினை மறைக்க....
தினமொரு புன்னகை முகமூடி தேவைப்படுகின்றது...!

-Gowshh



என் எதிரில் இருக்கும் தருணங்களில் பேச இயலா
மவுனங்களை பரிசளிப்பதில்
கெட்டிக்காரி நீ..!! 

- வசந்தகாலப் பறவை



                 இதழில் வாங்கியதை
கன்னத்தில் தருகிறாள்
காதல் கடன்காரி.
யாதுமானவன்


காதலென்று
எதைச் சொல்கிறீர்.
கூடி உண்பதையா,
கூடித் துயில்வதையா.
காதலென்பது
கூடித் தொலைவது
கூடித் தேடுவது 
யாதுமானவன்

உனது நேரத்திற்கு
எனது நேரங்கள்
காத்திருக்கின்றன
எப்போது வருவாய்
என் நேரக்
கோப்பையை நிரப்ப

 - யாதுமானவன்
நின்று நிதானித்து
ரசிக்கிறேன்
அவள் அவ்வளவு
சிறிய பூ.

 - யாதுமானவன்
சேலையுடுத்திய
பட்டாம்பூச்சிகளின்
அணிவகுப்பு போல்.

 - யாதுமானவன்

எவளிடமும் உன்
சாயலைத் தேடுகிறேன்
தூக்கத்திலும் மார்காம்பை
தேடும் மழலையைப் போல

 - யாதுமானவன்



                             நீ நீயாக 
நான் நானாக
நம்மை நாமாக மாற்றட்டும்
இந்த காதல்.

எனக்கு பிடித்தவை எல்லாம்
உனக்கும் பிடித்துப்போக
உனக்கு பிடித்தவை எல்லாம்
எனக்கும் பிடித்துப்போக
இறுதியில் அவை நமக்கு
பிடித்தவையாக மாற்றுகிறது
இந்த காதல்.!

அவள் நீட்டும் கையில் 
விழுந்து மழைத்துளிகள்
மட்டும் முத்தானாது



சாவது காதலாக
இருக்கட்டும்
வாழ்வது உன்
ஞாபகங்களாக

துளிர்க்கட்டும் ...!

@hishalee



நிறைய பெண்கள் இருந்தும் பேசுகிறேன் 
நீண்ட நேரமாக அவர்களிடம் 
அவளைப்பற்றி மட்டுமே!!!


- தென்புலத்தான்!!




ஏதோ ஒன்றை
கிறுக்கிட
அதிலும் நீயே
வந்தடைகிறாய்
எதிலும் நீயா
என்னிலும் நீயா.



சில்லென வருடி செல்லும்
அத்தென்றலுக்கு 
அவனின் சாயல்..

- #கண்மணி



என்னை 
மறக்கும் அளவிற்கு 
அவளை நினைக்கிறேன்!!!

@wings_twitz

காண்பவை எதிலும் 
உன் சாயல் 
ஒத்திருக்கவில்லை
ஆனால் அனைத்திலும்
உன்னையே
உணருகிறேன்..

itz_Sangeetha


விலகுதல் பாவம்
விலகி இருத்தல் காயம்
புரியாமல் பிரிதல் சாபம்..!!

        ~கிறுக்கன்


உடலை
தாண்டி..
உடலுக்குள்
இயங்கும்..
உறையும்..
இதயத்தில்
உயிரை
தொடுவதே


@im_Navyaa

நான் 
உன்னை
தொலைக்கவுமில்லை..
நெருங்கவுமில்லை..
தொலைவிலிருந்தே
ரசிக்கப் 
போகிறேன்...!

@im_Navyaa

கருத்துகள் இல்லை: