இந்த வலைப்பதிவில் தேடு

2 ஜனவரி, 2021

மழையென
மொழிந்தவள்
தூறலாய்
மாற்றுகிறாய்..
புயலென
இருந்தவள்
தென்றலென
மாற்றுகிறாய்..
கடலென பரந்தவள்
குளமாய் மாற்றுகிறாய்..
நானென இருந்தேன்..
நீயென மாற்றிவிட்டாய்
இப்போது..

#sara_tweets



என் புத்திசாலித்தனங்களில் #என்னை_தேடாதீர்கள்.......!!!
நான் என் கோமாளித்தனங்களில் தான் #ஒளிந்திருக்கிறேன்..........!!!!
- Littlekrishna



மலர்களின் அரசி
மாலையிட
சொல்கிறாள்...
மலர்வனத்தை
விரும்பா
தேனீயும் உண்டா...

#இளந்தென்றல் 



தொலைவின் தேடல்கள் எல்லாமே 
அருகில் இருந்த போது
தொலைக்கப்பட்டவையே..!
#தேடல்

 - இயற்கையின் இளவரசி



அனைத்தையும்
மனதிலிருந்து
கலைத்துவிட்டு
நீ மட்டும்
நிலைத்து விடுகிறாய்
அழியா ஓவியமாய்.. 
-அடங்காதவன்



கண் மூடி நான் காணும் 
கனவு நீ என்றால்
விடியாத இரவுகள் போதும் 
நான் வாழ்வேன்..! 
- அடங்காதவன்


என் மனதை மயக்கும் 
மந்திரப் புன்னகை
~அவளின் சிரிப்பு....

#Nathan



தவங்களும்
புரியாமல்,,,,,
வரங்களும்
தராமல்,,,,,,,
வம்பிழுத்துக்
கொண்டிருக்கிறாய்----
வாழ்தலில்
என்னோடு -மட்டும்........!
- அரிமா.க முருகேசன்


எனது கண்களை
விட்டு நீ எங்கே
மறைந்தாலும்
தூசியாக வந்து
உன்னை நேசிப்பேன்
என்னவளே...!

#காதல்_மொழி

- கவி குயில்


விட்டுச்சென்றாலும்
எவளும் எனை நெருங்காமல்
பார்த்துக் கொள்கிறாள்
அந்த காதல் ராட்சசி..!
- யாதுமானவன்



சில சமயம் மனத்தால் 
இடை விடாது நேசித்த
கண்களில் தெரியும் 
பார்வை மொழிகளில்
கூட வெளிப்படும் 
உண்மையான அன்பு
- Shenbagam



நீ இல்லாத நேரங்களில்
என் காதல் இன்னும்
அதிகமாகுகிறது. 
# ThalaSք

கருத்துகள் இல்லை: