இந்த வலைப்பதிவில் தேடு

1 அக்டோபர், 2018

நான் ரசித்த கவிதைகள் - அக்கினிக் குஞ்சுகள் - புகழேந்தி

அக்கினிக் குஞ்சுகள் - 

புகழேந்தி


காதல் நெஞ்சம் :


விரிந்த ரோஜா
ஜன்னல் வழியே
தலை நீட்டும்...                                            

குவித்த இதழில்
மல்லிகை மொட்டுகள்
முறுவலிக்கும்...

கெண்டை மீன்கள்
இங்குமங்கும்
பாய்ந்து பாய்ந்து 
நீந்தும்...

பூம்பஞ்சுக் கரங்கள்
புரியாத கோலங்களில்
புணர்ந்து கொள்ளும்...
 
கால் விரல்கள்
வெட்கம் சிந்தி
நெஞ்சத்தைச் சூடேற்றும் ...                                   

உலகம்
கடுகாய் சிறுத்துக் 
காலடியிற் கிடக்கும்

சுயநலம்
சும்மா இருக்காமல்
சுண்டி சுண்டி இழுக்கும்...

வெட்கம்
நகக்கண்கள் வழியே
நரம்புகளைத் தாக்கும் ...

...
காதல் ஒப்பந்தம்
கையெழுத்தானதாலா ...

கருத்துகள் இல்லை: