இந்த வலைப்பதிவில் தேடு

3 அக்டோபர், 2018

நான் ரசித்த கவிதைகள் -ஜூனியர் விகடனிலிருந்து

நான் ரசித்த கவிதைகள் 


என் தேச மக்கள்
அதிசயமானவர்கள்
அடுத்த தலைவரைத்
தேர்ந்தெடுக்க 
இப்போதே
சினிமா பார்க்க
ஆரம்பித்து விட்டார்கள்

- ஹபிபுர் ரஹ்மான்
சென்னை -3
*********************************************************************************
 மரம் நடுவிழாவில்
மரம் நட வந்த
அமைச்சரை
'அங்கே வேண்டாம்
இங்கே நடுங்கள்' 
என்றனர்
'ஏன்?' என்று கேட்க
"இங்கேதான்      எப்பொழுதும்
மரம் நடுவோம்"
என்றனர்

- வை . ராஜப்பா, நெய்வேலி
**********************************************************************************

மின் வெட்டு 
காரணத்தால்
மெழுகுவர்த்தி
ஏற்றினேன்...

மெழுகுவர்த்தி
வெளிச்சத்தில்
கம்ப்யூட்டர் சைன்ஸ்
படிக்கிறேன்

- V முரளிதரன், சென்னை

கருத்துகள் இல்லை: