இந்த வலைப்பதிவில் தேடு

3 அக்டோபர், 2018

நான் ரசித்த கவிதைகள்-கோகிலா தங்கசாமி, இன்குலாப், சி.மணி, வைரமுத்து, அறிவுமணி

நான் ரசித்த கவிதைகள்

 

கோயில்
இல்லாத ஊரிலும்
குடியிருக்க
நான் தயார்தான்
அந்த
ஊரில்
நீ
குடியிருந்தால் 

- கோகிலா தங்கசாமி





ஒரு நாள்
பரங்கிப் பூவினும் பெரிதான
பாவாடைக் கிழிசலைக்
கோலம் போட்ட மாலதி
என்னைக் கண்டு 
கூசி மறைத்தாளே
அதன் பின்
பரங்கிப் பூவும்
சிவந்த விரலும்
மலர்ந்த முகமும்
ரசனைக்கு உகந்த
காட்சிகளாய் இல்லை

-இன்குலாப்
 கிழக்குப் பின் தொடரும்

தன் உதடுகளால்
அவன் கன்னத்தில்
கையெழுத்திட்டாள்

- வைரமுத்து


காதலியே
உன் மேனியெங்கும்
என் உதடுகளால்
நடக்கப் போகிறேனடி
.....

நானோ
கைநாட்டுப் பேர்வழி
ரேகை வைக்க மட்டுமே
தெரிந்தவன்
கன்னத்திலேயே
வைக்கப்பட்டுமா?
என்று நெருங்குகிறேன்
....
உன் வயல் வயிற்றின்
தொப்புட்
குழியுள் இடற வோ
அழைத்தாய்
என்
உதட்டுப் பாகங்களை?

- அறிவுமணி

பூவாடை வரும்
மேனியிலே
உன் புன்னகை 
இதழ்கள்
விளையாட

- கண்ணதாசன்
   வசந்த மாளிகை படப் பாடல்

கருத்துகள் இல்லை: