இந்த வலைப்பதிவில் தேடு

4 அக்டோபர், 2018

நான் ரசித்த கவிதைகள் - வல்லிக் கண்ணன், இக்பால், முத்தையன்



















அக்கா வளர்த்த ஆடு
நிற்கிறது அய்யனாருக்கென்று
மாலையிட்டு நீரேற்றி
ஒரு நாள் கேட்டனர்
குளிரில் உதறிய தலை
குறிப்பாய் சொல்லி விட்டதாம்
‘இப்போது பூசை வேண்டாம்’
அய்யனார் காத்திருக்கின்றார்.

அக்காவைப் பார்த்த மாப்பிள்ளையை
விருப்பமில்லை என்றால்
‘உதை விழும், கழுதை
உனக்கென்ன தெரியும்’
அப்பா மிரட்டலில்
அக்கா ஆசைகள் அணைந்தன

துள்ளிக் குதிக்கிறது
அக்கா வளர்த்த ஆடு
பாவம் ! அவள் மட்டும்
அழுது கொண்டிருக்கிறாள்
-
 -  முத்தையன் “சிரபுஞ்சி வெயில்”

கருத்துகள் இல்லை: