வானம்பாடிகள் கவிதைகள்
தீயவன் தழுவியதால்
உள்ளம் கொதித்த
பானை
முக்காடு இட்டுக் கொள்கிறது
உன் வீடு தீ பிடித்து எரிகிறது
என செய்தி வந்தால்
அதிலுள்ள
சந்திப்பிழையைப்
பார்த்துக் கொண்டிருக்கும்
ஆசான்
விடிவு :
பூமித்தோலில்
அழகுத் தேமல்
பரிதி புணர்ந்து
படரும் விந்து
கதிர்கள் கமழ்ந்து
விரியும் பூ
இருளின் சிறகை
தின்னும் கிருமி
வெளிச்சச் சிறகில்
மிகுக்கும் கிருமி
- தருமு அரூப் சிவராம்
முகத்தில் முளைத்த
முலைகளாய் மயக்கும் என்
பிரதியின் கண்கள்
- தருமு அரூப் சிவராம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக