வாரப் பத்திரிக்கைகளில்
வந்த கவிதைகள் (1989)
தராசு முள்:
இரண்டுபொண்டாட்டிகளின்
இடையினில் சிக்கி
இழுபடும்
இளிச்சவாயன்
என்
குறை சொல்ல
கோட்டைக்குப்
போனேன்
அங்கே
அமைச்சர்கள் இல்லை
வெளிநாட்டுப்
பயணமாம் !
கோவிலுக்குப்
போனேன்
தெய்வத்தைப்
பார்க்க
அங்கே
சிலை இல்லை.
அதுவும்
–
வெளிநாட்டுப்
பயணமாம் !
-
கடுவை
கோபால்சாமி
வரவில்லை
எங்கள் வீட்டு
ஜன்னல் வில்லை
ஒடித்து –
அழும் என்னை
மீட்க
அட ஒரு
இராவணன் கூடவா
இல்லை ?
என்ன
சிறையெடுக்க !
ராமனென்ன
அடுத்த
அவதாரம்
கோகுலத்தில்
என்று
உறுதியளித்தால்
நான்
கூட
ஏக
பத்தினி
விரதன்தான்
!
-
தாராபுரம்
P.R.C பாலு
பேருந்து நடத்துனர்கள்:
தினம் தினம்LIC ஐ
60 பைசாவுக்கும்
எக்மோரை
70 பைசாவுக்கும்
விற்றுக்கொண்டிருக்கும்
விற்பனையாளர்கள்
-
ரத்னம்
– வாசு
இலக்கண
வகுப்பில்
தமிழாசிரியர்
தலையில்
குட்டினார்
‘அடி,
தொடை, தெரியாமல்
இருக்கிறாயே?
உருப்படுவியா?”
திருமணம்
முடிந்து
ஆராய்ச்சியில்
இறங்கினேன்.
அடியெனுக்கு
இன்று
ஐந்து
குழந்தைகள்
-
ரமணன்
பட்டுப் புடவை
பத்து நாளில்
வேண்டுமென
என் நிலையறியாது
என் மனைவி புலம்புகையில்
வெட்டிச் செலவென செப்பும்
அம்மா கட்சி நான் –
அறுபடை வீட்டுக்கும்
ஆறு நாளில்
போக வேண்டுமென
அம்மா நச்சரிக்கையில்
அத்தனைக்கும்
அழுது தொலைக்காதீர்
அனாவசியச் செலவென
அசை போடும்
அன்பு மனைவி கட்சி நான் –
கட்சி மாறுவதென்பத்
எனக்கொன்றும்
புதிது அல்ல !!....!!
-பொன்.இரா.ரவீந்திரன்
கண்ணன் காட்டிய வழி :
பலரிடம் திருடி
ஒருத்திக்குதவி
அவன்
அனாதை ரட்சகன் ஆனான்
ஊரைச் சுரண்டி
வழிவிடு முருகன்
திருக்கோயிலுக்கு
குடமுழுக்காட்டி
இவன்
பெரிய தருமிஷ்டன் ஆனான்
கன்டு வட்டிக் கந்தசாமி
கண்ணன் காட்டிய வழியில்
-
மீரா
(ஊசிகள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக