இந்த வலைப்பதிவில் தேடு

27 டிசம்பர், 2020

நான் ரசித்த ட்வீட்டர் கவிதைகள் - 2

நான் ரசித்த ட்வீட்டர் கவிதைகள் - 2


ஒவ்வோருடைய பிரச்சனைகளையும் கேட்டால் 
நாம் ஏதோ வரம் வாங்கி வந்தவர்களை போல 
எண்ணங்கள்  தோன்றுகிறது..!!

----------------------------

சொந்த காலில் நிற்கும்போதுதான்
தந்தையின் பாரம் தெரியவருகிறது..!!
-------------------------

ஒவ்வொருவருக்கும் 
தகுந்தாற் போல் நீங்கள் 
இருப்பீர்களேயானால்...
நீங்கள் அவர்களை 
ஏமாற்றி கொண்டிருக்கின்றீர்கள் 
என்றே அர்த்தம்....! 
-Gowshhh
--------------------------------

வாழ்க்கையில், (காதலில்)
நாம் செய்யும் எதார்த்தங்களும்
குற்றமாகவே பார்க்கப் படுகிறது
என்றால்; ஒன்று நேசத்தின்
உச்சமாய் இருக்கும், அல்ல
கோபத்தின் மிச்சமாய் இருக்கும்..!!

            ~கிறுக்கன்

--------------------------

வியந்த விழிகளுக்குள்
விரும்பி சிக்கி கொண்ட
கன்றின் பூவிழியில்
கைதான பொன்மான்குட்டி...

#அகல்_ஒளி 

==================


கல்வி கற்க 
புத்தகங்களை விட 
"நோட்டுகளே "
அதிகம் தேவைப்படுகின்றன..!!
#Y_S_

=====================




கருத்துகள் இல்லை: