இந்த வலைப்பதிவில் தேடு

10 டிசம்பர், 2020

நான் ரசித்த ட்வீட்டர் காதல் வரிகள்



அவள் தனித்துவமானவள் என்று
அவளே சொல்லிக் கொண்டாள்..
அவளே சமைத்தாள்
அவளே துணி துவைத்துக் கொண்டாள்..
அவளே உறங்கினாள்
அவளே விழித்தாள்..
தனக்கான ஒன்றை அவளே வாங்கிக்கொண்டாள்..
அவளே கிறுக்கினாள்
அவளே கிழித்தாள்..
அவளே இதை எழுதவும் சொன்னாள்..
ஆம்..அவள் தனித்துவமானவள்..

#நேசம் 



----------------------------------------------------------------------------------------------------------------
பிரார்த்தனை 
நான் 
செய்கிறேன்,  
தரிசனம் 
அவர்  
பெறுகிறார்.

#இவள்_420 
-  Jaanu



அவ்வவ்போது 

எட்டிபார்த்துக்கொண்டே இருக்கிறது..!!

உன்னிடம் நான் இருக்க.!

கவலைக்கு மட்டும் 

ஏன் இடமளிக்கிறாய் என்று..!!

#புன்னகை
- Abukatheeja



மனதை புரட்டி போடும் ஓசை
ஒன்று உண்டு எனில்; அது
கொலுசு ஓசைதான்

- kirukkan_suresh




இடையினம் பேசும் 
வல்லினம் மயக்கும் 
மெல்லினம் 
பாவையோ..?

- ஃபிர்தவ்ஸ் @Firdaus_Tweetz

















சில விஷயங்கள்
மெய் மறந்து
ரசிக்கத்தான் செய்கிறேன்,
என் எதிரில்
அவள்
இல்லாத போது மட்டுமே!

    - பிக்காச்சு











கருத்துகள் இல்லை: