இந்த வலைப்பதிவில் தேடு

6 டிசம்பர், 2020

காதல் கவிதைகள் இன்னும் கொஞ்சம் ட்வீட்டரிலிருந்து

காதல் கவிதைகள்  

இன்னும் கொஞ்சம்


தாங்குவது அவள் பாதமாக இருந்தால் 
என் கைரேகை அவள் குதிங்கால்களில் 
பதியும்வரை தாங்குவேன்!!!
#நீரா_கிறுக்கல் 



மேகங்கள் இருக்கும் வரை தூறலும்

மோகங்கள் இருக்கும் வரை காதலும்

நின்று விடாது......!!




கட்டி வைத்து
பல கதைகள்
பேசுது - என்
இறந்தகாலம்

அதைப்பார்த்து
மூச்சடைத்து
திகைத்து நிற்குது
என் வருங்காலம் 


உன் கன்னங்கள்
இரண்டும்
முத்த விதைகள்
விதைக்கவே..
தாடிக் களைகளை
தகர்த்தெறி
என் தலைவனே...!
💓


அடிச்சா தான்
வலிக்கும்னு இல்லை..
நமக்கு புடிச்சவங்க
நம்ம கிட்ட நடிச்சாலும்
வலிக்க தான் செய்யுது..!
 



கொஞ்சம் நேரம் பேச
“ஆசை”..
கொஞ்சிக் கொஞ்சிக் பேச
“ஆசை”..
நீ பேச பேச கேட்க
“ஆசை”..
உன் குரல் கேட்டு கேட்டு மயங்க
“ஆசை”..
மயங்கி மயங்கி
உன் மடியிலேயே
உலகை மறந்து கிடக்க
"ஆசை..!
- - அடங்காதவன்


நன்றிகள் :  ட்வீட்டர் கவிதைகள் படைப்பாளிகளுக்கு





கருத்துகள் இல்லை: