தெளிவில்லாத நேரத்தில்
மௌனமும்
சூழ்நிலை சரியில்லா
நேரத்தில் புன்னகையும்
நமக்கு பாதுகாப்பானது. #ֆ
- Thala Sp
அமைதியாக இருப்பதனால்
அலட்சியமாக எண்ண வேண்டாம்
அது ஆயிரம் ஏமாற்றங்களையும்
துரோகங்களையும் சந்தித்து இருக்க கூடும்...!
- அன்பே சிவம்
--------------------------------------------------------------------------
சுமைகள்
என்பது
அதன்
கனங்களில்
இல்லை
சுமக்கும்
மனங்களில் !
#தீtwitz
-------------------------------------------------------------------
"உரு"ப்பட போவதெல்லாம்
"உளி"பட்ட பிறகுதான்!!..
"சிற்பம்"..
- காளையன்
---------------------------------------------------------------------
இளவரசியின்
கை பட்டதும்
மோட்சம் பெற்றது
உலை அரிசி
- பாலசுப்ரமணி
-------------------------------------------------------------------------
விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்
இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள்
இவை தான் மனிதனின் எண்ணமாம்!!.
-Vippedu Veera
ஆறிப்போன தேநீர்
என்ன நினைத்ததோ தெரியவில்லை,
நாம் ஆசையோடு
முத்தம் பதிக்கும் பொழுதெல்லாம்,
ஆடையை அவிழ்த்து
அப்பிவிடுகிறது,
மேலுதட்டில்...
-TN72 DUSKY KUNDAN
------------------------------------------------------------------------------
முகமூடியை எத்தனை முறை
கழட்டி மாட்டினாலும்
உண்மை முகம்
அவ்வப்போது
முளைத்துக்கொண்டேதான்
இருக்கும்!!!
- மாஸ்டர் பீஸ்
--------==============-------------------------
பார்த்த முகத்தையே
பார்த்துக்கொண்டிருந்தால்
போர் அடிக்குது
என்று சொல்லவே முடியாத முகம்
குழந்தைகளின் முகம்.
_ ரஹீம் கஸ்ஸாலி
- - - - ------------------------------------------------------ - - - - -
ஓடுகின்ற ரயில்களை
ஒரு போதும் ரசித்திருக்கமாட்டார்
தேநீர் வியாபாரி..!
- AkashKannan96
_ _ _ ________________________ _
யாரிடமும் நெருங்காமல்
சிலர் இருக்க காரணம்
யாரும் வேண்டாம்
என்பதற்காக அல்ல..
பட்டதே_போதும்
என்பதற்காகவும்....❤️
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக