இந்த வலைப்பதிவில் தேடு

28 டிசம்பர், 2020

விலைமகளிர் கவிதைகள்

விலைமகளிர் கவிதைகள்



விலைமகளிர்:


நாங்கள் ரஜனியின் மக்கள்
மன்மதனின் ஒற்றர்கள்
கற்புச் சிறையை உடைப்பதால்
கைது செய்யப்படுகிறோம்
“………..”
நாங்கள் நிர்வாணத்தை விற்மனை செய்கிறோம்..
ஆடைகள் வாங்குவதற்காக
 
நாங்கள்
மன்மத அச்சகத்தின்
மலிவுப் பதிப்புக்கள்

-       நா.காமராசன் (கறுப்பு மலர்கள்)



கல்லறை வாசகம்:
விலைமாது :

உடலை முழுக்கச் செவியாக மாற்றிவிடும்
போதைப் புல்லாங்குழல் – இங்கு
புதைக்கப்பட்டுள்ளது
இங்குதான் இவள்
பணம் வாங்காமல்
பள்ளி கொள்கிறாள்
 

                                                                                                     -      மு.மேத்தா (ஊர்வலம்)



விபச்சாரம் :


பொருட்பாலுக்காக
காமத்துப்பாலை
விற்கிறேன்
அதற்காக
அறத்துப்பால் ஏன்
அழுது புலம்புகிறது..?

-கதம்பம்


விலைமகளின் விளம்பர வரிகள்:

பகலில் பார்க்க வெறுக்கும் நங்கள்
இருளில் பலரும் மீட்டும் வீணைகள்
 
பகலில் கண்ணீர் பாய்ச்சும் நாங்கள்
இரவில் பன்னீர் தெளிக்கும் செம்புகள்
 
பகலில் தனியாகப் படுக்கும் நாங்கள்
இரவில் துணையுடன் விழிக்கும் நிலாக்கள்
 
பகலில் ஆடை பூணும் நாங்கள்
இரவில் அட்டையில்லா புத்தகங்கள்
 
பகலில் பெண்மை பண்புகள் நான்கும்
இரவில் காளையர் மேய்ச்சல் கால்கள்
 

-      இரா.மதிவதணன் (ஒற்றையடிப் பாதை)




சிவப்பு விளக்கு எரிகிறது :

எச்சரிப்பதில்
எங்கள் பட்டணப்
பெண்கள் நல்லவர் !
 
தொலைவில் வருவோர்
விலகிச் சென்றிட
உதட்டில் சாயம்
ஒளிவிட வருவார்..
உபாயம் தெரிந்தவர்
உடனே தப்பலாம்
அபாயம் அருகே
வராதீர் என்றே ..

-      மீரா (ஊசிகள்)










     

மன்மத பாணம் :


சிவப்பு விளக்கு
வீதிகள் தோறும்
காமன் தொடுத்தோன்
காசுக் கணைகள் !

-      கு.க.சண்முகம் (பூத்த வெள்ளி)

கருத்துகள் இல்லை: