இந்த வலைப்பதிவில் தேடு

9 டிசம்பர், 2020

நான் ரசித்த ட்வீட்டர் கவிதைகள்

ட்வீட்டர் கவிதைகள்

ஒரு நாள் வலியோடு போகும் 
மறுநாள் வெறுத்துப்போகும்
சில நாட்களில் பழகிப்போகும்
வாழ்க்கை


பொறுமையாக  இருங்கள்  
உங்களுக்காக  எழுதப்பட்டவை 
உங்களிடம் வந்து சேர்ந்தே தீரும்... 
ஏனென்றால் 
அதை எழுதியவன் 
மிக சிறந்த எழுத்தாளன்  
இறைவன் 

Rizna Fathima



அவசரமாக
உண்டு முடிக்கிறீர்கள்.
இலையிலேயே இருக்கிறது
மீதிப் பசி.

~ ராஜாசந்திரசேகர்

















வாய்ப்பை பயன்படுத்தியதை  காட்டிலும் 
தவற விட்டதுதான் 
காலத்தின் சாபம்
.
- Saranya




















ஜன்னல் இருக்கையில் 
எப்பொழுதும் பயணிக்கிறது.,
மழலை விரல்களின் 
வியர்வை படிந்த 
இரசனை கரை..!

-  arun



எதையும் ரசிக்கும் பக்குவம் இருந்துவிட்டால்...
இதயத்தில் கனம் கூடுவதில்லை...!!! 
- கார்த்திக் தமிழன்





















சாவது ஒன்றும் 
    கடினம் இல்லை 
வாழ்க்கையை 
    வாழ தகுந்ததாக 
மாற்றுவதுதான் 
    அதைவிட கடினம்
_ Nayanthara

























மரங்களில்
பசுமை காட்டி

உதிர்ந்து 
மண்ணில் சேரும்
இலை பாேல

உன்
நினைவுகளுக்குள்
அலர்ந்து

பின்
எரிந்து
உரமாகின்றேன்
தினந்தாேறும் ♪

- சுகந்தீ



















பிரியத்தை
கற்றுக்



கொடுத்தவர்களே 
பிரிய நேர்ந்தது
கால மாற்றத்தின் நாகரிகம் .... 
-  சவேதி@Thyagu











கருத்துகள் இல்லை: