கல்லறை வாசகக் கவிதைகள்
வானொலி அறிவிப்பாளர்:
18.5.89
மீட்டரில்
இத்துடன்
இந்த அலை வரிசையில்
நிகழ்ச்சிகள்
நிறைவு பெற்றது.
இத்துடன்
இந்த அலை வரிசையில்
நிகழ்ச்சிகள்
நிறைவு பெற்றது.
பிரயாணி:
சைக்கிளில்
தொடங்கி
ஸ்கூட்டர்,
கார்,
ஆகாய
விமானம்
என
வளர்ந்து
இறுதியாய்
இங்கே
வந்திருக்கிறான்.
ஆராய்ச்சியாளர்:
இப்பொழுதுமரண ஆராய்ச்சி
நடத்துகிறார்
சீட்டாடும் சூதாட்டக்காரன்:
சீட்டைப்
போடு
சீட்டை
எடு என்றவர்
போட்டார்
மற்றவர்
எடுத்தனர்
விலைமாது :
உடலை முழுக்கச் செவியாக மாற்றிவிடும்போதைப் புல்லாங்குழல் – இங்கு
புதைக்கப்பட்டுள்ளது
இங்குதான் இவள்
பணம் வாங்காமல்
பள்ளி கொள்கிறாள்
-
மு.மேத்தா
(ஊர்வலம்)
மருத்துவச்சி
பிற சவம்
பார்க்கிறாள்
நடிகன்:
நிழலாய் நடிக்கஒத்திகை பார்த்தவன்
ஒத்திகையின்றி
நிஜமாய் இறந்தான்
மயானம் :
செல்லாத
காசுகள்
சேகரிக்கப்படும்
உண்டியல்
உதவாத
குப்பைகள்
நிரப்பப்படும்
கூடை
உபயோகித்த
குச்சிகள்
கொண்ட
தீப்பெட்டி
நூல்கள்
எல்லாம் கிழிந்த
செல்லரிக்கப்பட்ட
நூலகம்
மலட்டு
விதையில்
புதைக்கப்பட்ட
தோட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக