இந்த வலைப்பதிவில் தேடு

9 டிசம்பர், 2020

ட்வீட்டர் காதல் கவிதைகள்

ட்வீட்டர் காதல் கவிதைகள்

உன் அன்பின் 
அராஜகத்தின்
ஆதிக்கத்தை 
என்மீது செலுத்துவதில்
உன் கண்களுக்கு 
நிகரில்லை ...!

குரு mkamalguru

சொல்ல முடியா காதலிலும்
தோற்று போன காதலிலும் 
வென்றது.    ஈகோ.

#நண்பன்


என் மொத்த அன்பையும்  
கொட்டிவிட்டேன் 
மீதம் இருப்பது 
உயிர் மட்டும் 

நீ கேட்டால் 
அதுவும் 
உனக்கே 

- ratchasi2


அவளெனும் புயலில்
கரையை தேடுகிறேன்...!
- kirukkan suresh


உலகத்தில் உள்ள
சித்திரவதைகளில் 
ஒன்று தான் நீ என் 
வாழ்வில் வந்தது



கருவாச்சி அவளை ரசிக்கும்படி
எனக்காக தோன்றுகிறாள் 
பல வண்ணங்களில்
வானவில்லாய்.....!

#வெளிநாட்டுக்காரன் 



இப்போது இல்லை நீ
எப்போது தேடினாலும்
நான் கிடைக்க மாட்டேன்
மீண்டும் காயப்படுத்துவதற்கு
உனக்கு நிறைய வே 
சந்தர்ப்பங்கள் இருக்கிறது
ஆனால் காயப்படுவதற்கு
என்னிடம் ஒரு இதயம் தான்
இருக்கிறது... 
- பனித்துளி


அழகிய கவிதையாய் 
அவள் .
ரசிக்கும் கவிஞனாய்
நான்.
- நண்பன் 





கருத்துகள் இல்லை: